சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்த படம் ‘வேலைக்காரன்’. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 86 கோடி வசூல் செய்துள்ளது.
இன்னும் தெலுங்கில் ‘வேலைக்காரன்’ வெளியாகவில்லை. இப்படம் தமிழகத்தில் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘சிங்கம்-3’ வசூலை ‘வேலைக்காரன்’ முறியடித்துள்ளது, மேலும், ‘பைரவா’ தமிழக வசூல் ரூ 62 கோடி, ‘விவேகம்’ ரூ 66 கோடி என கூறப்படுகின்றது.
‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.