Thursday, November 13
Shadow

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ‘தளபதி 63′ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள ’99 சாங்ஸ்’ படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் ’99 சாங்ஸ்’ படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும். எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான ’99 சாங்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது.

ரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தில் வேலை செய்து வருகிறார். இந்த படம் ஒரு காதல் இசைப் படமாக இருக்கும். இந்தப் படத்தில் புது முகமாக எஹான் பாட், எடிஸ்ஸி வர்கீஸ் மற்றும் டென்சின் தல்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.