மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார்.
மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்...