
தமிழ் சினிமாவில் மிகவும் 9௦ களில்எல்லோரையும் கவர்ந்த ஒரு நாயகன் இவர் நடிக்கும் படம் என்றால் பெண்கள் கூட்டம் அலைமோதும் அப்படி இருந்த அரவிந்த்சாமி திடீர் என்று நடிப்புக்கு முழுக்கு போட்டார் மீண்டும் இவரை நடிக்க பலர் முயற்சித்தும் முடியவில்லை ஆனால் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரவைத்தது அவரின் குருநாதர் மணிரத்தனம் தான் கடல் படம் மூலம் இருந்தும் அவருக்கு மிகவும் பேர் வாங்கி கொடுத்த படம் மட்டும் இல்லாமல் ஸ்டைலிஷ் ஹீரோ என்ற பெருமையும் கிடைத்தது. இன்று சினிமாவில் பயங்கர பிஸி நடிகர் என்றால் அது இவர் தான் இவரின் கால் ஷீட் க்கு போட்டி போடும் தயாரிப்பாளர்கள்.
கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நடுவே விக்ரமை வைத்து ’துருவ நட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் மேனன்.
அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை கவுதம் மேனன் தயாரிப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன்னுடைய பக்கம் ஈர்த்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார்.
