
‘நீங்கள் பொருளை வாங்குகிறீர்களா… இல்லை, பொருள்தான் உங்களை வாங்குகிறதா?’ – விஷ்ணு டாக்கீஸின் ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியீடு
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நமக்குள் தோன்றும் ஆசை உண்மையிலேயே நம்முடையதுதானா? அல்லது விளம்பரங்களும் மார்க்கெட்டிங் உத்திகளும் நம்முடைய மனதில் அந்தத் தேவையை உருவாக்குகிறதா?
இந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய குறும்படம்தான் ‘CUSTOMER’. விஷ்ணு டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தக் குறும்படம், இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு Vishnu Talkies YouTube சேனலில் வெளியாகிறது.
இன்றைய விளம்பர உலகம் ஒரு பொருளை விற்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு மனிதனின் ஆசை, பயம், குறைபாடு, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகளையே முதலில் அடையாளம் கண்டு, பின்னர் அதையே ஒரு விற்பனைக்கான கருவியாக மாற்றுகிறது. இதுதான் ‘CUSTOMER’ படத்தின் மையக் கருத்து.
ஒரு சாதாரண குடும்பப் பெண்… ஒரு விளம்பரம்… ஒரு மனமாற்றம்!
குறும்படத்தின் கதாநாயகியான தேவி, கணவர் மற்றும் மகனுடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண். அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்தில் தனது தோற்றத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாதவர்.
ஆனால், தொடர்ந்து அவரது கண்முன்னே தோன்றும் முடி வளர்க்கும் எண்ணெய் விளம்பரங்கள், அவருக்குள் இருந்த ஒரு சிறிய குறையைப் பெரிதாக உணரச் செய்கின்றன.

சுற்றியிருப்பவர்களின் கருத்துகள், சமூகத்தின் பார்வை, மகனின் எதிர்பார்ப்பு என ஒவ்வொன்றும் தேவியின் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் அந்த எண்ணெயை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உருவாகிறது.
ஆனால் அந்த முடிவு உண்மையில் அவருடையதா?
இதைத்தான் குறும்படம் சுவாரஸ்யமான முறையில் கேள்வியாக முன்வைக்கிறது.
“You don’t buy a product, product buys you.”
ஒரு பொருளை நாம் வாங்குகிறோம் என்று நினைக்கும் நேரத்தில், உண்மையில் அந்தப் பொருள் சார்ந்த தேவையையும் விருப்பத்தையும் நம்முடைய மனதில் உருவாக்கி நம்மையே ஒரு ‘Customer’-ஆக மாற்றியிருக்கலாம் என்பதையே இப்படம் பேசுகிறது.
இந்த விளையாட்டின் மறுபக்கத்தில் இருக்கும் மார்க்கெட்டராக விக்னேஷ் கதாபாத்திரம் வருகிறது. மனிதர்களின் ஆசை, பயம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை புரிந்துகொண்டு, அதனை விற்பனைக்கான வாய்ப்பாக மாற்றும் அவனது பார்வைதான் கதையின் முக்கியமான திருப்பமாக அமைகிறது.
தேவி அந்த எண்ணெயை வாங்குகிறாரா? அல்லது தான் உருவாக்கப்பட்ட ஒரு ‘Customer’ என்பதை உணர்கிறாரா? என்பதே குறும்படத்தின் மீதிக் கதை.
கவனம் ஈர்க்கும் நட்சத்திரக் கூட்டணி
‘CUSTOMER’ குறும்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குறும்படத்தை டி. விக்னேஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். கிரிஸ் ஸ்ரீநாத் தயாரித்துள்ள இப்படத்தை விஷ்ணு டாக்கீஸ் வழங்குகிறது.
ஒளிப்பதிவை லூசிபர் குமார் மேற்கொள்ள, பின்னணி இசையை ஷோகன் பாபு கவனித்துள்ளார். இணை ஆசிரியராக தினேஷ் சித்தன், இணை இயக்குநராக சுபாஷ் சந்திர போஸ் கென்னடி, தயாரிப்பு நிர்வாகத்தை S. அகமது ஹமீத் மேற்கொண்டுள்ளனர். போஸ்டர் வடிவமைப்பை சுப்ரமணியம் செய்துள்ளார்.
‘CUSTOMER’ – இன்று மாலை 6 மணிக்கு Vishnu Talkies YouTube சேனலில் வெளியாகிறது.
ஒரு குறும்படத்தைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல… நாம் அன்றாடம் பார்க்கும் விளம்பரங்களையும், நாம் எடுக்கும் வாங்கும் முடிவுகளையும் கொஞ்சம் வேறு கோணத்தில் யோசிக்க வைக்கும் படைப்பாக ‘CUSTOMER’ அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘Are You Buying the Product… or Is the Product Buying You?’ – Vishnu Talkies’ ‘CUSTOMER’ Short Film Releases Today
Do we really buy a product because we need it? Or do advertisements and marketing strategies create that need within us?
Exploring this intriguing question is ‘CUSTOMER’, a new short film presented by Vishnu Talkies. Produced by Kris Srinath, the film is set to premiere today, August 18, at 6 PM on the Vishnu Talkies YouTube channel.
In today’s advertising-driven world, selling a product is no longer just about showcasing its features. Modern marketing often identifies a person’s desires, fears, insecurities and emotional vulnerabilities—and turns them into opportunities to sell. This forms the core idea behind ‘CUSTOMER’.
An Ordinary Woman, an Advertisement and a Change in Perspective
The story follows Devi, an ordinary middle-class woman who lives with her husband and son. Busy with her everyday responsibilities, she has never been particularly concerned about her appearance.
However, a series of advertisements promoting a hair-growth oil gradually make her increasingly conscious of a perceived flaw.
The comments of people around her, society’s expectations and, most importantly, her son’s perception begin to create emotional pressure within her.
Eventually, Devi starts considering buying the product.
But is that decision truly hers?
That is the question the short film attempts to explore.
Built around the thought, “You don’t buy a product, product buys you,” the film looks at how marketing can create a perceived need in the consumer’s mind and turn an ordinary individual into a ‘Customer’.
At the centre of this marketing game is Vignesh, a marketer who understands human desires, fears and insecurities and knows how to convert them into sales.
Will Devi buy the hair oil? Or will she realise that her desire to buy it has been carefully created? That forms the crux of ‘CUSTOMER’.
A Promising Cast and Technical Team
‘CUSTOMER’ features Pavithra Janani, Arun, Sridhar Chandra and Krishnan in key roles.
Written and directed by D. Vignesh Kumar, the short film is produced by Kris Srinath and presented by Vishnu Talkies.
The cinematography is handled by Lucifer Kumar, while Shogan Babu has composed the background score. Dinesh Sithan serves as co-editor, Subash Chandra Bose Kennedy as co-director, and S. Ahmed Hameed as production executive. The poster design is by Subramaniam.
‘CUSTOMER’ premieres today, August 18, at 6 PM on the Vishnu Talkies YouTube channel.
More than just a short film, ‘CUSTOMER’ attempts to make audiences look at the advertisements they encounter every day—and the choices they make as consumers—from a different perspective.
