Sunday, October 18
Shadow

Tag: Tamil film news

‘தாய்நிலம்’ – திரை விமர்சனம்   (Rank 3/5)

‘தாய்நிலம்’ – திரை விமர்சனம் (Rank 3/5)

Latest News, Review
‘தாய்நிலம்’ - திரை விமர்சனம் போரின் வலியையும், அகதிகளின் அவலத்தையும் தந்தை – மகள் உறவின் வழியே பேசும் மனதைத் தொடும் படைப்பு! போர் என்பது வெறும் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சத்தங்களும் மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தின் கனவுகளைச் சிதைக்கிறது; உறவுகளைப் பிரிக்கிறது; குழந்தைகளின் எதிர்காலத்தைப் பறிக்கிறது. தாய்நாட்டை விட்டு உயிரைக் காப்பாற்ற ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் வலியைச் சொல்லும் ‘தாய்நிலம்’, ஈழத் தமிழர்களின் அவலத்தை மட்டும் பேசாமல், உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அங்கு சிதைக்கப்படும் மனித வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் கொடூரச் சூழலில் மனைவியை இழந்து, மகளுடன் தாய்நாட்டை விட்டு வெளியேறும் ஒரு தந்தையின் பயணமே படத்தின் மையக்கதை. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிகப்பெரிய போராட்டமாக மாறும் சூழலில், தந்தை – மகள் இருவரும் எதிர்கொள்ளும் ...
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு!

அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு!

Latest News, Top Highlights
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு! மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘மாகாளி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, திட்டமிட்டதைவிட முன்னதாகவே முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த், இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், மனிதர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் அவர்களுக்குள் உருவாகும் போராட்டங்களை அழுத்தமான திரைக்கதையின் வழியாகப் பதிவு செய்யும் என படக்குழு தெரிவித்துள்...
“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

Latest News, Top Highlights
“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து! சென்னை: திரையுலகில் புதிய தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தொடங்கியுள்ள குறிஞ்சி அண்ணா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிவித்த நடிகர் சூரி, “குறிஞ்சி அண்ணாவுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறார் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த நிறுவனம் 100-க்கும...
“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு

“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு

Latest News, Top Highlights
“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு ‘சிக்மா’ திரைப்படம் உணர்வு, நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு முழுமையான படைப்பாக உருவாகியுள்ளதாக நடிகர் அன்பு தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய அவர், இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்திற்கான பயணம் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆரம்பகட்டத்திலேயே இயக்குநர் சஞ்சீவ் என்னிடம் கதையைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். எனது கதாபாத்திரம் குறித்து அவர் சொன்ன விதமே எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரம் தொடர்பான விஷயங்களை மட்டும் கவனிப்பேன். ஆனால், இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் இருக்கும் விஷயங்கள், கேமரா பணிகள் உள்ளிட்ட பல அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு...
“எனக்கு வீடு என்பது ஒரு இடம் அல்ல… என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான்!” – சிக்மா பட  விழாவில் நடிகை பரிதா அப்துல்லா நெகிழ்ச்சி

“எனக்கு வீடு என்பது ஒரு இடம் அல்ல… என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான்!” – சிக்மா பட  விழாவில் நடிகை பரிதா அப்துல்லா நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
“எனக்கு வீடு என்பது ஒரு இடம் அல்ல… என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான்!” – சிக்மா பட  விழாவில் நடிகை பரிதா அப்துல்லா நெகிழ்ச்சி ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய நடிகை பரிதா அப்துல்லா, படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் தனக்குள் இருக்கும் பதற்றத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். ஹைதராபாத்தில் பிறந்த தன்னுடைய பயணம், தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளியாக இருக்கிறது. அதனால் உற்சாகமாகவும், சற்று பதற்றமாகவும் இருக்கிறது” என்று கூறினார். மேலும், தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் பேசுவதைப் பாராட்டிய பரிதா, மொழி தொடர்பான சவால் இருப்பதால் தான் பேசும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். தனது வெற்றிப் பயணத்தி...
“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’

“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’

Latest News, Top Highlights
“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’ சென்னை: சமூகத்தில் தனக்கான உரிமையைத் தேடும் ஒரு சிறுவனின் போராட்டத்தையும், இயற்கையோடு அவன் ஏற்படுத்திக் கொள்ளும் அழகான நட்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘யானைமரம்’. ராமையா ரவிச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், ‘யானைமரம்’ படத்தின் First Look போஸ்டரை, ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு தளத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன் மற்றும் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஐந்து ரூபாய்க்காக தொடங்கும் போராட்டம்! பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்...
வி.ஆர். தினேஷின் 26வது படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என வித்தியாசமான தலைப்பு!

வி.ஆர். தினேஷின் 26வது படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என வித்தியாசமான தலைப்பு!

Latest News, Top Highlights
வி.ஆர். தினேஷின் 26வது படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என வித்தியாசமான தலைப்பு! பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் லுக் தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் வி.ஆர். தினேஷ், தனது 26வது திரைப்படத்தில் முழு நீள நகைச்சுவைக் கதையில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வி.ஆர். தினேஷுடன் கயல் ஆனந்தி, லிங்கேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கதையின் மையத்தை நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நகர்த்தும் வகையில் உருவாகி வரும் ‘பந்தா கேங்ஸ்’, முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன....
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

Latest News, Top Highlights
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புப் பயணத்தில் புதிய களங்களை நோக்கி பயணித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்கு...
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

Latest News, Top Highlights
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை சென்னை: ‘டோரதி’ திரைப்பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: “‘டோரதி’ படத்தின் கதையின் சுருக்கத்தை முதலில் கார்த்திக் சார் என்னிடம் பகிர்ந்தபோது, இப்படியொரு படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். கதையைப் படித்தவுடனேயே, ‘கண்டிப்பாக இந்தப் படத்தைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டேன். ஏனெனில் இப்படிப்பட்ட படங்களில் ஒரு பகுதியாக இருப்பதே நமக்குப் பெருமை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ‘டோரதி’ என்ற பெயருக்கே ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் படமும் அமையும் என்று நம்புகிறேன். ...
“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்!

“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்!

Latest News, Top Highlights
“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்! டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளதாக நடிகர் சனந்த் தெரிவித்துள்ளார். ‘டோரதி’ திரைப்பட விழா நிகழ்வில் பேசிய சனந்த், டொராண்டோவில் படம் பார்த்த பலரும் படம் முடிந்தவுடன் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, சிலர் உணர்ச்சிவசப்பட்டு தன்னை நீண்ட நேரம் கட்டித்தழுவியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். “டொராண்டோவில் ‘டோரதி’ படத்தை பார்த்த பலரும் படம் முடிந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டார்கள். அதன் பிறகு பலர் என்னை தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து, ஒரு நிமிடத்திற்கும் மேலாக என்னை கட்டித்தழுவி வாழ்த்தினார்கள். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும்” என்று சனந்த் குறிப்பிட்ட...