தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் விளம்பர யுக்தியை ரஜினியின் கபாலி படத்துக்கு தயாரிப்பாளர் பயன் படுத்தினார் முதல் முதலில் விமானத்தில் விளம்பரம் செய்து சாதனை செய்தார் இது நாம் அறிந்த விஷயம் தற்போது ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 2.O படம் இந்த படத்துக்கு இப்பவே விளம்பரம் ஆரம்பிதுள்ளர்கள்.
2.O தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் இல்லாத பொருள் செலவில் உருவாகியிருக்கும் படம் என்பதும் நாம் அறிந்த விஷயம் இப்போது அதே போல இந்த படத்தின் விளம்பரமும் அதே போல மிக பெரிய பட்ஜெட் செலவு செய்கிறார்கள் என்று தான் சொல்லணும் முதல் முதிலில் ஹாலிவுட்யில் மிக பெரிய ராட்சசா பலூன்யில் படத்தின் லோகோ மற்றும் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் படங்கள் பொருந்திய பலூன் பறக்கவிட்டனர் இதும் நாம் பார்த்த விஷயம் இப்போது இதெல்லாம் விட மிக பெரிய ஒரு யுக்தியை பயன்படுத்தபோகிறார்கள் அதை செய்யவும் அந்த பிரபலத்துக்கு மனம் வேண்டும் என்ன அது என்று தானே கேக்குறிங்க
‘பிரிக்க முடியாதது?’ என திருவிளையாடல் நாகேஷ் ஸ்டைலில் கேட்டால், ‘ஆர்யாவும் சைக்கிளும்’ என ட்விட்டரே அதிரும் அளவுக்கு ட்வீட்கள் வந்து விழும். அந்தளவுக்கு சைக்கிளிங் மீது தீராத காதல் கொண்டுள்ளார் ஆர்யா. தனக்குப் பிடித்தமான இந்த விஷயத்தை வைத்தே தற்போது ‘2.0’ படத்திற்காக, ஜூலை 30 முதல் 1450 கி.மீ. தூரம் சைக்களிலிலேயே பயணம் செய்ய உள்ளார் ஆர்யா. ‘தலைவரின் ஆசீர்வாதத்துடன் கிளம்புகிறேன். ஊக்குவியுங்கள்!’ என ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.