Saturday, April 18
Shadow

அஜித்துக்கு கை கொடுக்குமா ஆகஸ்ட் மாதம்

கார்த்தி நடித்த ‘தீரன் அதிகராம் ஒன்று’ என்ற படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கும் இந்தப்படத்தில் கன்னட நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று முதலில் அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே-1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் இந்தப்படத்தை மே-1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். படப்பிடிப்பு எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாததினால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போகவும் வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.

அதன்படியே 3 மாதங்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 10-ஆம் தேதி தான் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்துக்கும் அஜித்துக்கும் ராசியில்லை, இது தெரியாமல் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்கிறார்கள் என்ற புலம்பலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் கேட்கிறது.

இதற்கு முன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியானது. ‘விஸ்வாசம்’ படம் வெற்றியடைந்தது. அந்தப் படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ 2017, ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி வெளியானது. படம் படு தோல்வியடைந்தது.

இப்போது ‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யும் ஆக்ஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. அஜித்துக்கு ஆகஸ்ட் மாதம் ராசியான மாதமாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்