கேரளா துணை கலெக்டர் – விஜய் சந்திப்பு
துணை கலெக்டரின் ஃபேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய்.
சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பதிவில் "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார்.
அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள். தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.
...









