Wednesday, October 28
Shadow

Author: admin

செப்.23-ம் தேதி வெளியாகிறது ‘வீர சிவாஜி’

செப்.23-ம் தேதி வெளியாகிறது ‘வீர சிவாஜி’

Latest News
கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீர சிவாஜி' திரைப்படம் செப்.23-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வீர சிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 'வீர சிவாஜி' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பாடல்களை ஒவ்வொரு பாடல்களாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது படக்குழு. அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் தணிக்கை பணிகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. தற்போது இப்படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என...
மேல்நாட்டு மருமகன் படத்திற்கு 33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்

மேல்நாட்டு மருமகன் படத்திற்கு 33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்

Latest News
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். "செக்ஸ் வன்முறை, என்று இல்லாத குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் - ஆண்ட் ரியன் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம். இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்.. அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன் . அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க பிளீஸ் என்றார். நீங்...

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் மாரத்தான் ஐயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது

Shooting Spot News & Gallerys
உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் ஐயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 மணி நேரம் தொடர்ந்து ஐயர்னிங் செய்து அந்த சாதனையை முறியடிக்கப் போகிறார். இந்த சாதனை நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் ஏ1,ஏ6 இரு மாவட்டங்களின் சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர்கள் பி.எஸ்.வி.குமார், குணராஜா, லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.தியாகராஜா, முரளி, எம்.பி.சிவராமகிருஷ்ணன், கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் டேனியல் சூர்யா ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். கின்னஸ் சாதனை முயற்சியாளர் டேனியேல் சூர்யா கூறும்போது: உலக அளவில் தொடர் மாரத்தான் ஐயர்னிங் சாதனை 100 மணி நேரம். இந்த சாதனையை முறியடிப்பதுடன் கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்ச...
நான்கு பேர் வாழ்கையை சொல்ல வரும்  “மாநகரம் ” படத்தின் ட்ரைலர்

நான்கு பேர் வாழ்கையை சொல்ல வரும் “மாநகரம் ” படத்தின் ட்ரைலர்

Latest News
"மாயா" வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் " மாநகரம்". வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ , சந்தீப் கிஷன் , சார்லி மற்றும் முனிஸ் காத் “ ராமதாஸ்” ஆகியோர் நடிக்கிறார்கள் . படத்தில் நடித்துள்ள நால்வருடைய காதாபத்திரமும் மிகவும் வித்யாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் முக்கிய புள்ளிகளான நால்வரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களுடைய வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நால்வரின் எதிர்பார்ப்பை த்ரில்லர் பாணியில் அமைத்துள்ளார்கள். நான்கு பேர் கதையிலும் ஓர் உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் இதோடு தொடர்புடைய ஹைபர் லிங்க் எனும் புதுமையான திரைக்கதை யுக்தியை படத்தில் கையாண்டுள்ளார்கள். படத்தில் நா...
மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

Shooting Spot News & Gallerys
அமலாபால் இயக்குனர் விஜய் பிரிவுகுக்கு பின் அமலாபாலுக்கு வந்த வாய்ப்புகள் தட்டி போனது இதற்க்கு காரணம் இயக்குனர் விஜயும் அவரின் அப்பாவும் என்று சொல் பட்டது இது ஒரு பக்கம் இருக்க விஜய் அமலபால் பிரிவுக்கு முக்கிய காரணம் தனுஷ் என்றும் சொல்லப்பட்டது இதனால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் ஏற்ப்பட்டது இதனால் வட சென்னை படத்தில் இருந்து நீக்கபட்டார் எண்டுறம் பேசப்பட்டது தபோது தமிழில் எந்த வாய்ப்பு கிடைக்காதால் தனுஷ்yin ‘வேலையில்லா பட்டதாரி;, ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்த அமலாபால், தற்போது தமிழில் படங்கள் எதுவும் இல்லாமல் கன்னடம் பக்கம் போகிறார். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார். இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் மனோரஞ்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமலாப...
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது  உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில்

கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில்

Shooting Spot News & Gallerys
உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணி அமைத்திற்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பானது, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திட்டமிட்டது போல் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பானது காரைக்காலிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி களஞ்சியமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது....
காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

Shooting Spot News & Gallerys
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் நாயகி யார் என்று ஒரு பெரிய கேள்வி குறியாக இருந்தது பல நடிகைகள் பெயர் அடிபட்டது பின் காஜல் அகர்வால் என்று படபிடிப்புக்கு செல்லும் முதல் நாள் முடிவானது ஆனால் இப்ப காஜல் மீதி பட குழவினர் மட்டும் இல்லாமல் தல அஜித்தும் படு கோவமா இருக்காராம் . இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம். இதுபோக நடிகை காஜல் அகர்வால் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் சிவா, காஜலை நேரில...
அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை ஹீரோவும் விஜய் இல்லை கபாலி இயக்குனர் ரஞ்சித்

அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை ஹீரோவும் விஜய் இல்லை கபாலி இயக்குனர் ரஞ்சித்

Latest News
கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. இதை ரஞ்சித்தும் பல பேட்டிகளில் உறுதி செய்தார். ஆனால் சூர்யா அடுத்ததாக கொம்பன் புகழ் முத்தையா படத்தில் ஹீரோவாக நடிக்கபோவதாக அறிவித்தார். இதனால் கடுப்பான ரஞ்சித், சூர்யா படத்தை இயக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதன் பின் விஜய் படத்தை இயக்க போகிறார் இந்த படத்தை தாணு தயாரிக்கிறார் என்ற கிசுகிசுக்க பட்டது ஆனால் இதற்க்கு ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விஜய் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு வந்ததாகவும் விஜய்க்காக ஒரு கதையை ரஞ்சித் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் ரஞ்சித் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
கர்நாடகாவில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய அஜித் சுவர்

கர்நாடகாவில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய அஜித் சுவர்

Latest News
அஜித்என்ற தாரக மந்திரம் தமிழகம் மட்டும் இல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் எல்லா இடத்திலும் பரவி வருகிறது குறிப்பாக அஜித் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்கள் சிவ லிங்கங்களை நிறுவியுள்ளனர், மேலும், அஜித் புகைப்படத்துடன் ஒரு சுவர் நிறுவியுள்ளனர். இவை அஜித்தின் மார்க்கெட் மற்ற மாநிலங்களிலும் வேறு லெவலில் இருப்பது தெரிகிறது...
பாகுபலி  இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு

பாகுபலி இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு

Latest News
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகம் எப்ப ரிலீஸ் என்று உலகமே எதிர்பார்க்கபடுகிறது இதற்க்கு முக்கிய காரணம் கட்டப்பவை யார் கொன்றது என்று அறியவே. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து அடுத்த ஒரு மாதத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாம்....