Wednesday, October 28
Shadow

Author: admin

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

Latest News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என ஒருசில நடிகர்கள் போட்டியில் இருக்கும்போது எப்போதுமே அடைமொழியை விரும்பாத அஜித்துக்கு தற்போது வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்ற பட்டத்தை கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரியாவின் உள்ள carinthia என்ற பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்து carinthia நகரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பே அஜித் ஒரு இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்பதுதான். அந்த செய்தியில் இந்திய நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய இவர் சில்வஸ்டருக்கு ...
ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களில் இந்த படத்தின் செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ‘அஜித் 57’ படக்குழு தற்போது ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஹெலிகாப்டர் காட்சி ஒன்று அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Carinthia பகுதியில் உள்ள ‘The mountain Hotel என்ற ஹோட்டலில் 35 அறைகள் படக்குழுவினர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தயாரிப்பாளர் செலவு செய்து வருவதாகவும், இவர்களுடைய உணவுத் தேவைக்கு இந்தியா...
ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

Shooting Spot News & Gallerys
இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான். அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்....
அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை  பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

Latest News
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமரா வரலாற்று ஆவண படங்களை வெளியிட்டார். உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும். தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங...
சுசியின் ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா,  வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம்

சுசியின் ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா, வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம்

Latest News
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே- 2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு!. AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய திருட்டுப்பயலின் இரண்டாம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. “உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்..! இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். முதல...
வியாபாரத்தில் கொடி கட்டும் சிவகார்த்திகேயனின் “ரெமோ”

வியாபாரத்தில் கொடி கட்டும் சிவகார்த்திகேயனின் “ரெமோ”

Latest News
தற்போதைய வசூல் சக்கரவர்த்தி என்றால் அது சிவகர்த்திகேயன் பதினைந்து காலமாக இருக்கும் சுள்ளான் மற்றும் முன்னணி நடிகர்கள் படத்தை ஓரம் தள்ளி வியாபாரத்தில் கொடி கட்டுபவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 32 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2.ஒ படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்

ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2.ஒ படத்தை பற்றி இதுவரை வெளிவராத தகவல்

Latest News
ஷங்கர் பிறந்தநாளான இன்று ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இயக்குனர் ஷங்கருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘2.ஓ’ படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்புதான் அது. ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பி முழுவீச்சில் நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். இதையடுத்து, இந்த மாத இறுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசரையும் வெளிய...
நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

Latest News
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். ஜெயம் கொண்டான் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார். அதற்கு பிறகு விஷ்ணு நடிப்பில் போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது. ஆனால் விஷ்ணு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார். கண்ணன் படத்திற்கு தேதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பி.சி.ஸ்ரீராமின் உதவியார் வி.என் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ப...
ஜி.விபிரகாஷ்குமார்யின் “ப்ருஸ்லீ”  படபிடிப்பு முடிந்தது

ஜி.விபிரகாஷ்குமார்யின் “ப்ருஸ்லீ” படபிடிப்பு முடிந்தது

Latest News
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் புரூஸ்லீ. கிரித்தி கர்பண்டாஸ் என்ற மும்பை மாடல் ஹீரோயின். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுபட்டி ராம்தாஸ், ஆனந்தராஜ், மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்கிறார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார். சாதாரண இளைஞன் ஒருவன் தன்னை புரூஸ்லீ ரேன்ஞ்சுக்கு நினைத்துக் கொண்டு செய்யும் விஷயங்களை சொல்லும் படம். ஒரு கட்டத்தில் அவன் நிஜமாகவே புரூஸ்லீ மாதிரி ஆக வேண்டிய சூழ்நிலையும் வருகிறது. போலி புரூஸ்லீ நிஜ புரூஸ்லீயாக எப்படி மாறுகிறார் என்பது கதை. காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. தற்போது டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, பணிகள் நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் பின்...
குளோபல் இன்போடெய்ன்மென்ட் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஜீவா நடிக்கும் “கீ” !!

குளோபல் இன்போடெய்ன்மென்ட் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஜீவா நடிக்கும் “கீ” !!

Latest News
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் “ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் , ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் என வெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்ப...