Monday, August 10
Shadow

“திரைத்துறைக்காக மீண்டும் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” – நடிகர் அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்

“திரைத்துறைக்காக மீண்டும் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” – நடிகர் அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்

சென்னை:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரை மீண்டும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் தற்போது திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு துறை மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மிகப்பெரிய துறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“அஜித்குமார் அவர்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேசிப்பதற்கும், அவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியதற்கும் முக்கிய காரணம் சினிமாதான். அந்தத் திரையுலகிற்கு அவர் தொடர்ந்து பங்களிக்க வேண்டிய அவசியம் இன்று அதிகமாக உள்ளது.

தற்போது கார் பந்தயத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் அஜித்குமார், உயிருக்கு ஆபத்தான அந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு பதிலாக, ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தினால் அது திரைத்துறைக்கும் பெரும் பலனாக அமையும்.

முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து தரமான படங்களை உருவாக்க முன்வர வேண்டும். அந்தப் படங்களில் அஜித்குமார் நடித்தால் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் உறுதியாகும்.

எனவே, திரைத்துறையின் வளர்ச்சியையும், ரசிகர்களின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்துடன் மீண்டும் முழுவீச்சில் திரைப்படங்களில் நடிக்க வருமாறு அஜித்குமார் அவர்களை இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறேன்” என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகானின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அஜித்குமார் மீண்டும் அதிகப்படியான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புடன் இந்த வேண்டுகோள் ஒத்துப்போவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Mansoor Ali Khan Urges Ajith Kumar to Return to Films for the Welfare of Lakhs of Cinema Workers

Chennai:

Actor Mansoor Ali Khan has made a heartfelt appeal to Tamil superstar Ajith Kumar, urging him to return to acting more actively, emphasizing that the film industry supports the livelihoods of lakhs of workers and technicians.

In his statement, Mansoor Ali Khan said that cinema is not merely a source of entertainment but a vast industry that provides employment to countless artists, technicians, and daily wage workers whose families depend on it.

He pointed out that it was cinema that made Ajith Kumar one of Tamil cinema’s biggest stars and earned him millions of fans across the globe. According to Mansoor Ali Khan, Ajith’s continued contribution to the industry would greatly benefit both audiences and those who rely on filmmaking for their livelihood.

Referring to Ajith Kumar’s passion for motorsport, Mansoor Ali Khan acknowledged the actor’s dedication to racing but noted that it is an extremely risky sport. He appealed to the star to devote more time to films, saying that his return to regular acting would not only delight fans but also generate employment across the industry.

Mansoor Ali Khan further suggested that a group of leading producers could come together to bankroll multiple projects featuring Ajith Kumar. Such collaborations, he said, would strengthen the Tamil film industry while creating opportunities for thousands of workers.

Concluding his appeal, Mansoor Ali Khan respectfully invited Ajith Kumar to return to acting with a larger purpose, stating that it would benefit the film fraternity and bring immense joy to his millions of admirers.

The statement has since attracted attention on social media, with many fans expressing hope that Ajith Kumar will take up more film projects in the coming years.