
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் விமர்சனங்களையும் தாண்டி இப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. மேலும் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் படம் இவ்வளவு விரைவில் 100 கோடி வசூல் செய்வது இதுவே முதல்முறை.
ஆனால் ஒரு சிலர் இது சாத்தியம் இல்லை என்றும் தமிழ் சினிமாவிற்கு அந்த அளவுக்கு வசூல் செய்வது கடினம் என்றும் ஒரு சிலர் கூறிவருகிறார்கள் .
இதை பெரிய விழாவாக கொண்டாட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் தமிழகத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிதளவில் நடந்துவருவதால் இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
