
பொதுவாக விஜய் படம் ரிலீஸ் நேரத்தில் எதாவது பிரச்சனை வரும் வரவில்லை என்றாலும் சிலர் வரவைப்பார்கள் ஆனால் இந்த முறை வேறு வடிவில் வந்து நிற்கிறது அதாவது விஜய்யின் பைரவாவுடன் முதலில் 7 படங்கள் போட்டி போட்டது பின்னர் அது நான்கானது இதில் என்னவென்று கேட்கிரிகேர்களா வாங்க பாப்போம்
பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பைரவாவுடன் இன்னும் சில படங்களும் வெளியாகிறது. இதனால் பைரவாவுக்கு என்ன பிரச்சனை என நினைக்கலாம். படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
எப்படியும் தமிழகம் முழுவதும் எல்லா தியேட்டர்களிலும் பைரவாதான் ஓடும் என நம்பிய அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால் ப்ரூஸ்லீ, புரியாத புதிர் போன்ற படங்கள் தியேட்டர்களை பங்குபோட்டால் விநியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காத சூழல் உருவாகிவிடும். இது பைரவாவுக்கு வந்த விஷப்பரீட்சையே ஆகும்.
