
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பைரவா’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாயுள்ள இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் 16.61 கோடி என ஸ்ரீக்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய ட்விட்ட்அர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள், விமர்சனங்கள், வசூல் நிலவரங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘பைரவா’ படத்தை வெளியிட்டிருக்கும் ராம் சினிமாஸ் “Very Happy to say that first 4 Days collection of #Bairavaa is the highest grosser in lifetime for us !! We are already in the profit zone” என்று தெரிவித்துள்ளது.
ராம் திரையரங்கின் இந்த அறிவிப்பு, விஜய் ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளது. மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் ‘பைரவா’ படத்தின் முதல் நாள் 10,47, 030 ரூபாய் வசூல் செய்துள்ளது. மலையாள படங்களைத் தவிர இதர மொழி படங்களின் வசூல் இதுவே அதிகமாகும்.
கலவையான விமர்சனங்களுக்கு இடையே, ‘பைரவா’ நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
