
திரைப்பட வெற்றிகளைத் தாண்டி… சுயாதீன இசைப் பயணத்தில் புதிய அடியை எடுத்து வைத்த அனிருத்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது தனது இசைப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். திரைப்பட இசை உலகில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள அவர், தற்போது சுயாதீன இசை (Independent Music) துறையில் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘அரவிந்த்’ என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் என்ற தனது சொந்த இசை நிறுவனத்தின் மூலம், யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் இணைந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது. திரைப்பட பாடல்களின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு தனிப்பட்ட கதை மற்றும் கருத்தை இசை வழியாக வெளிப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
‘அரவிந்த்’ என்ற கதாபாத்திரம் ஒரு சாதாரண இசைக் கலைஞரின் கனவுகளையும் போராட்டங்களையும் பிரதிபலிக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக இசையை வெளியிடுவது இன்று எளிதாக இருந்தாலும், அந்த இசையை நீண்ட காலம் மக்களிடம் கொண்டு சேர்த்து நிலைத்திருப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் பாடல் பேசுகிறது.
‘வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் உலகளவில் கவனம் பெற்ற அனிருத், அதன் பின்னர் ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’, ‘தேவரா: பார்ட் 1’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். அதே நேரத்தில், ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
‘அரவிந்த்’ குறித்து அனிருத் பேசுகையில், “ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அரவிந்த் இருக்கிறான். திறமையை நிரூபிக்கவும், அங்கீகாரம் பெறவும் போராடும் அனைவரின் கதையாக இந்தப் பாடலை பார்க்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில் தனித்துவமான கலைஞர்கள் சந்திக்கும் சவால்களை நகைச்சுவை மற்றும் நையாண்டி கலந்த வடிவில் சொல்ல முயன்றுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பாடல் அனிருத்தின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு கலைஞராக அவர் கடந்துவந்த பாதை, சந்தித்த சவால்கள் மற்றும் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றின் சுவடுகளை இதில் காண முடிகிறது. மேலும், அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் வரும் மாதங்களில் பல புதிய சுயாதீன இசை முயற்சிகளையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இசையின் எல்லைகளைத் தாண்டி, தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் அனிருத் எடுத்துள்ள இந்த புதிய அடி, இந்திய சுயாதீன இசை உலகில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Beyond Film Music: Anirudh Embarks on a New Independent Music Journey
Tamil cinema’s celebrated music composer Anirudh Ravichander has begun a new chapter in his musical career. Having already established himself as one of the most successful composers in the film industry, Anirudh is now strengthening his presence in the independent music space with the release of his latest track, “Aravind.”
Released through his own label, Albuquerque Records, in collaboration with Universal Music India, the song is available in both Tamil and Telugu. The project marks a significant step beyond mainstream film music, allowing Anirudh to explore storytelling through pop and hip-hop while expressing a more personal and original creative vision.
The character Aravind represents the dreams, struggles, and aspirations of an independent musician. While digital platforms and social media have made music distribution easier than ever, the song highlights the challenges artists face in building a lasting presence and finding their audience in an increasingly crowded digital landscape.
Anirudh first rose to national fame with the viral phenomenon “Why This Kolaveri Di?” and has since delivered chart-topping soundtracks for blockbuster films such as Jailer, Vikram, Leo, Coolie, and Devara: Part 1. He also made a successful entry into Bollywood with Jawan, further cementing his reputation as one of India’s most influential music composers.
Speaking about the song, Anirudh said, “In some way, Aravind reflects all of us. There is an Aravind within each person. The song speaks about an independent artist striving to prove his talent and earn recognition. Through humor and satire, we wanted to portray the challenges unique artists face while trying to stand out in today’s content-saturated digital world.”
The track is also deeply personal for Anirudh, drawing inspiration from his own experiences, struggles, and growth as an artist. He believes the song will resonate with musicians, creators, and dreamers navigating similar journeys in pursuit of their passions.
With Albuquerque Records, Anirudh plans to launch several more independent music projects and concept-driven releases in the coming months. As he expands beyond the boundaries of film music, this new venture is expected to contribute significantly to the growth of India’s independent music scene and inspire a new generation of artists.
