Thursday, May 14
Shadow

பாகுபலி 2-வில் சீக்ரெட்டாக கெஸ்ட் ரோலில் நடித்த மிகப்பெரிய பிரபலம்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்கள்.இந்த படத்தில் பல பிரபலங்கள் தானாக முன் வந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் சூர்யா இப்ப இந்தியாவின் மிக முக்கிய நடிகர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தமாக 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல் பாகத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் ஒரு கேமியோ ரோலில் நடித்தது போல இந்த பாகத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ஹிந்தி மீடியா தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply