பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வீட்டின் தலைவரை தேர்வு செய்வது நடந்தது. ஜனனி ஐயர், மும்தாஜ், மகத் ஆகியோரில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும். மூன்று பேரும் சக போட்டியாளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
எனக்கு தலைமை ஏற்கும் தகுதி உள்ளது என்று நினைக்கிறேன். மகத்தை விட எனக்கு தலைமையேற்கும் தகுதி அதிகம் இருக்கிறது என்று நினக்கிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி பேசாமல் அடுத்தவரை ஒப்பிட்டு குறை கூறுவது போன்று பேசிய ஜனனியை பார்த்த பார்வையாளர்களுக்கு கடுப்பு தான் வந்தது. அதிலும் அதையே திரும்பத் திரும்ப கூறி எரிச்சலை ஏற்படுத்துகிறார் ஜனனி. என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது என்று தான் தோன்றியது.
மும்தாஜ் தன்மையுடன் பேசியுள்ளார். ஜனனியும், மகத்தும் சின்னப் பசங்க என்று அவர் சொல்வது உண்மை தான். மும்தாஜ் கொஞ்சம் அதிகமாக தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்.
பொன்னம்பலம் ஆனந்த் வைத்யநாதனிடம் பாட்டு பாட கற்றுக் கொண்டதுடன் மும்தாஜை பார்த்து மலை மலை மலை மலை என்று பாடுகிறார். வீட்டில் காவி வேட்டி அணிந்துள்ளார்.
மொத்தத்தில் ஜனனி ஐயர் மூலம் பிக் பாஸ் குடும்பத்தில் குதூகலமும் சண்டையும் அரங்கேறும் வரும் நாட்களில் மகத் இன்னும் யாரெல்லாம் கதற போகிறார்கள் என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும்