Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் வீட்டின் புதிய விருந்தினர் யார் தெரியுமா ?

 

 

பிக் பாஸ் கடந்த சீசனை விட இந்த சீசன் கொஞ்சம் ஆரவாரம் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் இந்த சீசன் போட்டியாளர்கள் தான் ஒருத்தவ்ருக்கு ஒருதவர் இளைத்தவர்கள் இல்லை எல்லோரும் சண்டை கோழிகள் ஒரு சில அப்பாவிகள் அவர்கள் அவர்கள் காதல் அரங்கேற்றம் சண்டை குடிமிபிடி சண்டை இப்படி எல்லாம் இருப்பதால் பயங்கர சுவாரியசமாக போய்கொண்டு இருக்கிறது.இப்போது புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் போகபோவது யார் தெரியுமா

வருத்தப்படாத வாலிபர் சிங்கம்’, ‘தெகிடி’, ‘ஈட்டி’, ‘திருட்டுப்பயலே 2’ போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வைப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் தவறான முறையில் பேசியதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேக பேட்டியளித்த நடிகை ஷாலு ஷாமு, பிக் பாஸ் சீசன் 3 குறித்தும், தனக்கு பரிட்சயமான மாடல்கள் மீரா மிதுன், அபிராமி ஆகியோர் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் 17வது போட்டியாளர் யார் என்பதையும் உறுதிப்பட கூறினார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17வது போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஒருவர் செல்லவிருப்பதாக கூறினார். இது தொடர்பாக ஷாலு ஷாமு பேசுகையில், விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ சீரியல் ஹீரோயினும், மாடலுமாகிய ஆல்யா மானசா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அதிகபட்ச வாய்ப்பிருப்பதாக கூறினார். ஆல்யா மானசா நடித்து வண்டஹ் ராஜா ராணி சீரியலும் நிறைவடைந்ததை அடுத்து, அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என ஷாலு ஷாமு கூறியிருப்பது சாத்தியமாக அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், பிக் பாஸ் சீசன் 3 தொடங்குவதற்கு முன்பாக, உள்ளே செல்லும் போட்டியாளர்கள் பட்டியலில் மீராவின் பெயர் இருந்ததை போல் என்னுடைய பெயரும் இருந்தது. ஆனால், அவர் கோர்ட், கேஸ் என சர்ச்சைகளில் இருந்ததால் அவரை பிக் பாஸ் குழுவினர் தேர்வு செய்திருக்கலாம் என ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் உண்மையான குணாதிசயம் குறித்தும் பல தகவல்களை ஷாலு ஷாமு பகிர்ந்துக் கொண்டார்.