
பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது விஜய் டிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான விடையை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் இரண்டாவதாக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தப் பட்டியலில் 90 எம்.எல் பட நடிகை ஸ்ரீகோபிகா, நடிகை பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிடவில்லை
மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. முதல் சீசன் ஜூன் 25-ம் தேதியும், இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதியும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.
- மொத்தத்தில் இந்த முறை கவர்ச்சி நடிகைகளின் பட்டியல் நீளம் அதிகமாக உள்ளது இதை பார்க்கும் போது ஹிந்தி பிக் பாஸ் போல இருக்கும் என்பது உறுதி.
