Wednesday, March 26
Shadow

விஜய் டிவியின்பிக் பாஸ் கமலுக்கு வந்த சத்ய சோதனை

கடந்த பத்து வருடங்களாக கமல்ஹாசன் தன் படங்களில் வரும் கேரக்டராக இல்லாமல் கமலே என்ற பிம்பமாகவே படத்திலும் தெரிவார் . கமலே கூட ரசித்து படங்களில் அனுமதிப்பார். உன்னை போல ஒருவனில் எனக்கு வோட் இல்லை என்பதில் ஆரம்பித்து உத்தமவில்லனில் மனோரஞ்சன் தான் கமல்ஹாசன் போல என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் விதைத்து கண்ணாமூச்சி விளையாடுவார்.

நேற்று முன் தினம் பிக்பாஸ் ஷோவில் கமலை காண சகிக்கவில்லை. ஸ்க்ரிப்ட்டட் ப்ரோக்ராமாக இருந்தாலும் இது உண்மை என்று நம்பவைக்க படாதபாடு படுகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்தில் மக்களில் இருந்து அறிமுகம் ஆவதில் தொடங்கி நாங்க என்ட்ரிக்கு வேற ஐடியா வெச்சு இருந்தும்ன்னு சொல்லி அந்தரத்தில் ரோப்பில் ஒரு அப்பாவி டூப்பை தொங்க விடுவது, ஸ்கிரிப்ட் பேப்பரை மறந்துடேன் நான் சரியா பேசுறேன்னா என்று கேட்பது செவி வழியாய் வரும் செய்தியை கேட்டு Sorry சொல்லி “விவோ வழங்கும் பிக் பாஸ்ன்னு சொல்வது”, கமலின் மொபைலுக்கு கால் வருவதும் அதில் அவரின் மகள் அக்சரா பேசுவது கமலும் மிடில் ஆப் தி ஷாட்டில் இருக்கிறேன்னு சொல்வது,இன்னொருவர் கமலிடம் மொபைல் கேட்பது, அந்த மொபைல் பிக் பாஸ் ஷோ வழங்கும் vivo மொபைலாக இருப்பதும்,கிச்சனில் காட்டப்படும் பொருட்கள் ஆச்சி மசாலா பிக் பாஸின் விளம்பரதாரராக இருப்பதும் இயல்பானது அல்ல, வையாபுரி தன் பாக்கெட்டில் செல் போன் வைத்து இருப்பதை பார்த்துட்டு அவர் பின்னால் எல்லாம் செக் பண்ணிட்டு கடைசியாய் முன் பாக்கெட்டில் மொபைல் எடுத்துட்டு இது எல்லாம் எடுத்துட்டு போக கூடாதுன்னு அட்வைஸ் பண்ணி அனுப்புவதுன்னு ஷோ முழுக்கவே இயல்பாய் இருப்பதாய் காட்டியே அது செயற்கைன்னு நிருபிச்சுக்கிட்டு இருக்காங்க .விஜய் டிவி பயன்படுத்திய யுக்திகள் அனைத்தும் மோசமாய் அமைந்தது

கமல் பிக் பாஸ் ஷோவின் ப்ரெஸ் மீட்டில் சொன்னார். சின்னத்திரையின் வீச்சு ரீச் அதிகம் என்னை பார்த்து பல நடிகர்கள் வருவார்கள் இதுக்கும் முன்னோடியாய் இருப்பேன்னு, ஆனால் இந்த ஷோவை பார்க்கும் சினிமா நடிகர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள். என்ன கஷ்டம் வந்தாலும் விஜய் டிவியில் மட்டும் ஷோவுக்கு செல்ல கூடாது என்பதை கமல் மற்ற நடிகர்களுக்கு கண்டிப்பாய் புரிய வைத்து விடுவார். இந்த ஷோ வெற்றி அடையுதோ, தோல்வி அடையுதோ கமலை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது. காட்டில் வேட்டையாடி கொண்டு இருந்த சிங்கத்தை சர்க்கஸ் கூண்டில் அடைத்து விட்டனர்.?

Leave a Reply