
விஜய் டிவியின்பிக் பாஸ் கமலுக்கு வந்த சத்ய சோதனை
கடந்த பத்து வருடங்களாக கமல்ஹாசன் தன் படங்களில் வரும் கேரக்டராக இல்லாமல் கமலே என்ற பிம்பமாகவே படத்திலும் தெரிவார் . கமலே கூட ரசித்து படங்களில் அனுமதிப்பார். உன்னை போல ஒருவனில் எனக்கு வோட் இல்லை என்பதில் ஆரம்பித்து உத்தமவில்லனில் மனோரஞ்சன் தான் கமல்ஹாசன் போல என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் விதைத்து கண்ணாமூச்சி விளையாடுவார்.
நேற்று முன் தினம் பிக்பாஸ் ஷோவில் கமலை காண சகிக்கவில்லை. ஸ்க்ரிப்ட்டட் ப்ரோக்ராமாக இருந்தாலும் இது உண்மை என்று நம்பவைக்க படாதபாடு படுகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்தில் மக்களில் இருந்து அறிமுகம் ஆவதில் தொடங்கி நாங்க என்ட்ரிக்கு வேற ஐடியா வெச்சு இருந்தும்ன்னு சொல்லி அந்தரத்தில் ரோப்பில் ஒரு அப்பாவி டூப்பை தொங்க விடுவது, ஸ்கிரிப்ட் பேப்பரை மறந்துடேன் நான் சரியா பேசுறேன்னா என்று கேட்பது செவி வழியாய் வரும் செய்தியை கேட்டு Sorry சொல்லி "விவோ வழங்கும் பிக் பாஸ்ன்னு சொல்வது", கமலி...