Monday, December 6
Shadow

இன்னும் ஐந்து நாட்களில் உள்ள நிலையில் மக்களை ஏமாற்றும் பிக் பாஸ்

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மீண்டும் விஜய் டிவியிலேயே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது.

இதற்கான புரோமோக்கள் கடந்த மாதத் துவக்கத்திலேயே விஜய் டிவியில் வெளிவரத் தொடங்கியது. நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஐந்து தினங்களே உள்ளன. இந்நிலையில், இன்று புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ளது எனக் கூறுகிறார்.

ஆனால், தொடர்ந்து வரும் விளம்பரங்களில் பிக்பாஸ் வீட்டில் குடியேறப் போகிறவர்கள் பற்றி, கமல் மேலும் க்ளூ கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வெளியாகாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், இவர் தான் பிக்பாஸ் போட்டியாளர் என பலரது பெயர்களை சமூகவலைதளங்களில் உலவ விட்டு வருகின்றனர்.

CLOSE
CLOSE