Monday, May 19
Shadow

Tag: #bigboss2 #vijaytv #kamalhaasan #latest

மக்களிடம் பேச பிக் பாஸை பயன்படுத்துவேன்” – கமல்ஹாசன்

மக்களிடம் பேச பிக் பாஸை பயன்படுத்துவேன்” – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் தான், கமல் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என பலரும் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கமல் நடிகனாக இல்லாமல், மக்களிடம் நேரடியாக பேசினார். நிகழ்ச்சியின் நேயர்களாக மக்களை பார்க்காமல், அவர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பின்னர் தான் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் வேகம் எடுத்தது. அதன்பின்னர் அவர் தொடங்கிய ட்விட்டர் அரசியல், அதிமுகவினருடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் வந்து நிற்கிறது. தற்போது அவர் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது பாகத்தை அவர் தொகுத்து வழங்குகிறார். இதுதொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று பேசிய கமல்ஹாசன், “பிக்பாஸ் என் சுயநல...
இன்னும் ஐந்து நாட்களில் உள்ள நிலையில் மக்களை ஏமாற்றும் பிக் பாஸ்

இன்னும் ஐந்து நாட்களில் உள்ள நிலையில் மக்களை ஏமாற்றும் பிக் பாஸ்

Latest News, Top Highlights
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மீண்டும் விஜய் டிவியிலேயே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது. இதற்கான புரோமோக்கள் கடந்த மாதத் துவக்கத்திலேயே விஜய் டிவியில் வெளிவரத் தொடங்கியது. நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஐந்து தினங்களே உள்ளன. இந்நிலையில், இன்று புதிய புரோமோ வெளியாகியுள்ளது. ...
விஜய் டிவியின் பிக் பாஸ் 2 லேட்டஸ்ட் அப் டேட்

விஜய் டிவியின் பிக் பாஸ் 2 லேட்டஸ்ட் அப் டேட்

Latest News, Top Highlights
விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவு...