
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது பிகில் படம் கேரளாவில் ரூ 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இவை மலையாள படங்களையே மிஞ்சும் வியாபாரம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10 தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
