
குடும்பம், பாசம், ஆன்மீகம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை!
சென்னை: மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப உறவுகள், நம்பிக்கை, பாசம், மனமாற்றம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. ரவி தேஜாவுடன் பிரியா பவானி சங்கர், குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூன்று விதமான கதைக்களங்களை இணைத்த ‘இருமுடி கட்டு’
படத்தின் தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் பேசும்போது, “திரில்லர், குடும்பக் கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட கதையை சிவா எங்களிடம் கூறினார். இந்த மூன்றையும் எப்படி ஒன்றாக இணைக்கப் போகிறார் என்ற ஆச்சரியம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இந்தப் படம் தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கல்ட் கிளாசிக் படமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தை சிவா நிர்வாணா இயக்க வேண்டும் என்று ஐயப்பனே தேர்வு செய்தது போல் உணர்கிறோம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” என்றார்.
மூன்று தந்தைகளைச் சுற்றி நகரும் கதை
வசனகர்த்தா விஜய் பாலாஜி பேசுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளேன். மூன்று தந்தைகளுக்கு இடையே நடைபெறும் வித்தியாசமான கதை இது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக ஜி.வி. பிரகாஷின் இசை அமைந்துள்ளது. மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கும் ரவி தேஜா சாருக்கு இது ஒரு சிறப்பான தருணம். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

கனவிலும் நினைக்காத வாய்ப்பு – பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால்
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் கூறும்போது, “ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். தமிழ்ப் படங்களைப் போலவே, இந்தப் படத்தையும் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
பிரியா பவானி சங்கரின் வளர்ச்சியும் வெற்றியும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் என்னையே நெகிழச் செய்தது. நான் எழுதிய மூன்று பாடல்களும் வெறும் பாடல்களாக இல்லாமல், கதையுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் அமைந்துள்ளன” என்றார்.
தமிழ் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம்
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா பேசுகையில், “ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகப்பெரிய பெருமை. இயக்குநர் சிவா சாரின் கதையை அவர் எதிர்பார்த்த விதத்தில் திரையில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா கூறும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. என்னை தேர்வு செய்த இயக்குநர் சிவா சார், ரவி தேஜா சார், பிரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
‘மொழி ஒரு தடையல்ல’ – பிரியா பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், “கதையை முதலில் கேட்டபோதே இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்தபோது, படத்தின் பாடல்கள் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை வந்தது.
மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்றாலும், படப்பிடிப்பின்போது கதையில் எந்தவிதமான தேவையற்ற மாற்றங்களும் செய்யாமல், இயக்குநர் சிவா தான் முதலில் சொன்ன கதையை அப்படியே படமாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது.
ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இது வேறு மொழியில் இருந்து வந்த படம் என்ற எண்ணமே தமிழ் ரசிகர்களுக்கு வராது. மொழி என்பது தடையல்ல. அப்பா – மகள் உறவு இருக்கும் அனைத்து குடும்பங்களிலும் இந்தப் படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
‘ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு விஷயத்தையாவது எடுத்துச் செல்ல வேண்டும்’
இயக்குநர் சிவா நிர்வாணா பேசுகையில், “தமிழ் சினிமாவுடன் எனக்கு எப்போதும் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்போது, அந்தப் படத்திலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். அந்த வகையான படங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது.
‘இருமுடி கட்டு’ குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படமாக இருக்கும். படத்தை பார்த்து முடித்த பிறகு, அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளைப் பற்றி யோசிப்பீர்கள்.
தெலுங்கில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்கள் படத்தைப் பார்த்து வருகிறார்கள். அதேபோல் தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்தப் படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடியும். தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
‘ரவி தேஜாவுக்கு இருக்கும் தனித்துவம் ரஜினியைப் போல’ – ஜி.வி. பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், “ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கும்போது அதன் கதை எனக்கு மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களின் கதைகளைக் கேட்டபோதே அவை வெற்றி பெறும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதேபோல ‘இருமுடி கட்டு’ படத்தின் கதையைக் கேட்டபோதும் இது நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றியது.
ரவி தேஜா சாருக்கு இங்கே நிறைய ஹீரோக்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு இருந்த தனித்துவமான கமர்சியல் இமேஜைப் போல, ரவி தேஜா சாருக்கும் கமர்சியல் படங்களில் தனித்துவமான பாணி உள்ளது. அவருக்கு ஏராளமான இயக்குநர்களும் ரசிகர்களாக உள்ளனர்.
இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் சிவா நிர்வாணாவுக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகும். தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்தப் படத்திற்காக பல விருதுகளைப் பெறுவார் என எதிர்பார்க்கிறேன்.
குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்” என்றார்.
‘இந்தப் படத்தின் ஆன்மா ஜி.வி. பிரகாஷின் இசை’ – ரவி தேஜா
நடிகர் ரவி தேஜா பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றி. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா.
தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்துள்ளார். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
இயக்குநர் சிவாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஏன் என்பது குறித்து படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். முதலில் நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” என்றார்.
குடும்ப உறவுகளையும் மனிதர்களின் மனமாற்றத்தையும் ஆன்மீகப் பின்னணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘இருமுடி கட்டு’, ரவி தேஜாவின் வழக்கமான கமர்ஷியல் பாணியிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தையும், குடும்ப உறவுகளை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான களத்தையும் முன்வைக்கிறது. தமிழ் ரசிகர்களிடமும் படம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தினர்.

‘Irumudi Kattu’ Press Meet: Ravi Teja and Team Talk About Family, Faith and Emotional Storytelling
Chennai: The press meet of Irumudi Kattu, starring Mass Maharaja Ravi Teja and directed by Siva Nirvana, was held in Chennai. Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under the banner of Mythri Movie Makers and presented by T-Series Films, the film was released worldwide in theatres on August 21.
Featuring Ravi Teja, Priya Bhavani Shankar and child artiste Nakshatra in prominent roles, Irumudi Kattu explores family relationships, faith, emotional transformation and spirituality. The film has music by G.V. Prakash Kumar and cinematography by Vishnu Sharma.
A Story Blending Thriller, Family Drama and Spirituality
Producer Y. Ravi Shankar said that director Siva Nirvana had presented the story with three distinct layers — thriller, family drama and spirituality.
“When Siva narrated the story to us, we were surprised and wondered how these three elements could come together. But he has executed the idea beautifully on screen. Ravi Teja, Priya Bhavani Shankar and the entire technical team have done a wonderful job.
“We believe audiences across South India will embrace this film and that it could eventually become a cult classic. We feel that Lord Ayyappa himself chose Siva Nirvana to tell this story. Watch the film and share your thoughts,” he said.
A Story Revolving Around Three Fathers
Dialogue writer Vijay Balaji said he had already worked on two films with Mythri Movie Makers.
“This is a story that revolves around three fathers. One of the biggest strengths of the film is G.V. Prakash Kumar’s music. It is a special occasion to have Mass Maharaja Ravi Teja in Chennai on Madras Day. I am confident that audiences will enjoy the film,” he said.
“Writing Songs for Ravi Teja Was Something I Never Imagined”
Lyricist Balaji Venugopal said working on a Ravi Teja film was an opportunity he had never imagined.
“I never thought even in my dreams that I would write songs for a Ravi Teja sir film. I am extremely happy about this opportunity. I strongly believe Tamil audiences will celebrate this film.
“I am also happy about Priya Bhavani Shankar’s success. The climax moved me emotionally. All three songs I wrote for the film are important pieces that are closely integrated with the story. I am confident that audiences will connect with the film,” he said.
“A Fresh Experience for Tamil Audiences”
Cinematographer Vishnu Sharma said it was a privilege to work with Ravi Teja.
“Working on a film featuring Ravi Teja sir is a great honour. Siva sir has presented the story beautifully. I believe the film will offer Tamil audiences a fresh experience,” he said.
Child artiste Nakshatra said, “This film is very special to me. I thank director Siva sir, Mass Maharaja Ravi Teja sir, Priya Bhavani Shankar and the entire team for giving me this opportunity.”
Priya Bhavani Shankar: “Language Is Never a Barrier”
Actress Priya Bhavani Shankar said she developed strong confidence in the film as soon as she heard the story.
“When I first heard the story, I immediately felt a strong sense of belief in the film. Once G.V. Prakash Kumar came on board as the composer, I was confident that the songs would become a major highlight.
“Even though this is a film starring a major hero, director Siva did not compromise on the story during the shoot. He stayed true to what he had originally narrated. I am proud to be a part of this film.
“Working with Ravi Teja sir was an unforgettable experience. Tamil audiences will never feel that this is a film that has come from another language. Language is not a barrier. I believe the film will connect with every family that shares the bond between a father and daughter,” she said.
Siva Nirvana: “Audiences Should Take Something Back From a Film”
Director Siva Nirvana spoke about his emotional connection with Tamil cinema.
“I have always had an emotional connection with Tamil cinema. I particularly admire the films of Bharathiraja sir and K. Bhagyaraj sir.
“When audiences walk out of a theatre, I believe they should take at least one meaningful thought or emotion from the film with them. That is the kind of cinema I want to make. Tamil cinema has given me a lot in that regard.
“Irumudi Kattu is a film that families can watch and enjoy together. After watching the film, its emotional impact will make you think about your daughter, wife and family relationships.
“The film has received a very good response in Telugu. Families are coming together to watch it. I want Tamil audiences to experience the film in the same way.
“I thank the producers for their support. Priya Bhavani Shankar’s character will have a strong impact on the story. Audiences will also see Ravi Teja in a completely different dimension. I am confident that Tamil audiences will enjoy the film,” he said.
G.V. Prakash Kumar: “Ravi Teja Has a Unique Commercial Style”
Composer G.V. Prakash Kumar said the story was the primary reason he came on board.
“For me, the story is extremely important when I work on a film. When I heard the stories of films like Polladhavan and Raja Rani, I immediately felt that they had blockbuster potential. I had the same feeling when I heard the story of Irumudi Kattu.
“Many heroes in the industry are fans of Ravi Teja sir. Just as Rajinikanth sir had a unique identity in commercial cinema, Ravi Teja sir also has a distinct style of his own. Many directors are also his fans.
“After this film, Siva Nirvana will have a separate fan base. The film has already become a major success in Telugu. I expect child artiste Nakshatra to receive several awards for her performance.
“I encourage everyone to watch the film with their families in theatres. The entire technical team has done an excellent job,” he said.
Ravi Teja: “G.V. Prakash Kumar’s Music Is the Soul of the Film”
Ravi Teja thanked the entire technical team for their contribution to the film.
“I thank everyone who worked on this film. G.V. Prakash Kumar’s music is the soul of the movie.
“The film has received a tremendous response in Telugu. Nakshatra has a bright future ahead of her, and Priya has also delivered a wonderful performance. I thank the producers for their support.
“I like director Siva very much. I will tell you why at the success meet of the film. For now, watch the film and share your thoughts,” Ravi Teja said.
With its combination of family emotions, relationships, spirituality and personal transformation, Irumudi Kattu presents Ravi Teja in a different emotional space while retaining the elements expected from a mainstream entertainer. The team expressed confidence that the film will strike a strong emotional chord with Tamil audiences as well, particularly through its portrayal of family bonds and the father-daughter relationship.
