
இவர் கஹோ நா… பியார் ஹை (2000) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காடர்: எக் பிரேம் கதா (2001) திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இத்திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
மேலும் பிலிம்ஃபேரின் சிறந்த நடிப்பிற்கான விருதையும் அப்படத்திற்காக அமீஷா பெற்றார். அதற்குப்பின் பல திரைப்படங்களில் அமீஷா நடித்திருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவின. எனினும் 2006 ஆம் ஆண்டில் வெளியான அன்கஹீ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் வெற்றித்திரைப்படமான பூல் புலையா வில் (2007) துணைப்பாத்திரத்தில் நடித்தார்.
இவர் நடித்த படங்கள்
கஹோ நா… பியார் ஹை
பத்ரி
காடார்: எக் பிரேம் கதா
யே ஜிந்தகி கா சஃபர்
க்ராண்தி
கியா எகி பியார் ஹே
ஆப் முஜே அச்சே லக்னே லகே
யே ஹை ஜல்வா
ஹம்ரஸ்
புதிய கீதை
பர்வானா
சுனோ சசுர்ஜீ
ஷார்ட்: த சேலஞ்ச்
நானி
வாதா
எலான்
ஜமீர்: த ஃபயர் வித்தின்
நரசிம்ஹுடு
மங்கல் பாண்டே: த ரைசிங்
மேரே ஜீவன் சாதி
ஹம்கோ தும்ஸே ப்யார் ஹை
டீஸ்ரி ஆங்க்: த ஹிட்டன் கேமரா
தத்தஸ்டு
அன்கஹீ
ஆப் கி காதிர்
ஹனிமூன் ட்ராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்.
ஹேய் பேபி
பூல் புலையா
ஓம் சாந்தி ஓம்
தோடா ப்யார் தோடா மேஜிக்
ரன் போலா ரன்
சட்டூர் சிங் டூ ஸ்டார்
