Friday, April 17
Shadow

Latest News

‘ரம்’ திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்திருக்கும் ‘பேயோபோபிலியா’ பாடலை பாடியிருக்கிறார் சிலம்பரசன்

‘ரம்’ திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்திருக்கும் ‘பேயோபோபிலியா’ பாடலை பாடியிருக்கிறார் சிலம்பரசன்

Latest News
ஒருபுறம், தன்னுடைய துள்ளலான இசையால் இள வட்டாரங்களை தன் பிடியில் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிரூத்.... மறுபுறம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் நடிகர் - பாடகர் சிலம்பரசன். இவர்கள் இருவரும் ஒரு பாடலுக்கு இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் அனிரூத் இசையில் சிலம்பரசன் பாடியிருக்கும் 'ரம்' திரைப்படத்தின் 'பேயோபோபிலியா' பாடல். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உதயமாகியுள்ள இந்த 'பேயோபோபிலியா' பாடலானது, ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷிய நிகழ்வுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் 'ரம்' படத்தில் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னண...
மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான்

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான்

Latest News
உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான் - M.S.Dhoni The Untold Story M.S.Dhoni The Untold Story தூசி மிகுந்த ராஞ்சியின் சாலைகளில் துவங்கி மும்பையில் உள்ள வாங்கேடே மைதானத்தில் 2011 நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோடிகணக்கான இந்தியர்களின் கனவான இந்த உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படமாகும். மகேந்திர சிங் தோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மிக சிறந்த மனிதர் ஆவார். மகேந்திர சிங் தோனி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய தந்தைக்கு தோனி நன்றாக படித்து நிலையான ஒரு வேலையில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது கனவு. தோனி விக்கெட் கீப்பிங் செய்தால் சரியாக இருக்கும்...
ஜீவாவை தீவிரமாக காதலிக்கும்  ‘கவலை வேண்டாம்’ நடிகை சுனைனா

ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் ‘கவலை வேண்டாம்’ நடிகை சுனைனா

Latest News
இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் செல்லும் ஒரு நடிகை, சுனைனா. நம்முடைய அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் போல, தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் சுனைனா, தற்போது ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள 'கவலை வேண்டாம்' படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் கவலை வேண்டாம் படத்தை இயக்கி இருக்கிறார் 'யாமிருக்க பயமே' புகழ் டீகே. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் திரட்டியுள்ள 'கவலை வேண்டாம்' படமானது வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி (தசரா விடுமுறை நாட்களில்) ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க தயாராக இருக்கின்றது.... "கவலை வேண்டாம் படத்தில் ஜீவா சாருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது... தமிழக ரசிகர்களுக்...
விஷ்ணு விஷாலின் அந்தஸ்தை அதிகப்படுத்தியது எது தெரியுமா?

விஷ்ணு விஷாலின் அந்தஸ்தை அதிகப்படுத்தியது எது தெரியுமா?

Latest News
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், அதன் பிறகு பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இயக்குநர் எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. இந்த காமெடி படம் 50 நாட்கள் ஓடி விஷ்ணுவின் கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிப்படமாகவும் அமைந்தது. தனது சொந்த தயாரிப்பும் சோடை போகாமல் வசூலில் அள்ளிகுவித்தது இதனால் மேலும் பெயர் கமர்சியல் ஹீரோ என்ற பட்டமும் வாங்கி கொடுத்துள்ளது . 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் வெற்றி எந்தளவுக்கு விஷ்ணு விஷாலுக்கு அந்தஸ்தை அதிகப்படுத்தியது தெரியுமா? குற்றப்பரம்பரை படத்தை ட்ராப் பண்ணிய பாலா, தன்னுடைய அடுத்தப் படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷாலை கமிட் பண்ண நினைக்குமளவுக்கு அவரது ஸ்டேட்டஸ் உயர்ந்தது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கி...
கீர்த்திசுரேஷ்யை சீண்டிய தொகுப்பாளினி

கீர்த்திசுரேஷ்யை சீண்டிய தொகுப்பாளினி

Latest News
கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லை தென் இந்திய மொழிகளில் பிஸி நடிகை என்று சொல்லலாம் இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் கீர்த்திசுரேஷ் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் எல்லாமே மிகவும் அடக்க ஓடுக்கமான பாத்திரங்கள் அப்படி இருந்தும் குறிகிய காலத்தில் மார்க்கெட்யை பிடித்தவர் இன்று முன்னணி ஹீரோக்கள் குட மட்டும் நடிக்கும் நயாகியாக வளம் வருகிறார். கீர்த்தி சுரேஷ் இப்போது விஜய் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் தொகுப்பாளினி, லிப் லாக், கிளாமர் ரோல்களில் இனிமே கீர்த்தியை பார்க்க முடியுமா அப்படினு கேட்டிருக்கிறார். அதுக்கு நம்ம கீர்த்தி, எனக்குனு கொள்கை இருக்கு, நான் அப்படிலாம் நடிக்க மாட்ட அப்படினு சொல்லியிருக்காங்க. என்ன ஒரு நல்ல பொண்ணு....
பீரங்கி புரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நமீதா

பீரங்கி புரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நமீதா

Latest News
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று உருவாகிறது 'பீரங்கிபுரம்'. இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜான் ஜானி ஜனார்த்தனா. புதுவிதமான கதை அம்சம் கொண்ட இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக நடிகை நமீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்....
ரஜினி – இரஞ்சித்வுடன் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!. – கவிஞர் உமாதேவி

ரஜினி – இரஞ்சித்வுடன் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!. – கவிஞர் உமாதேவி

Latest News
“மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான “வீரத் துரந்தரா” பாடலை எழுதியவரும் இவரே. மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன், இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி, வீரதுரந்தரா தொடர்ந்து உங்கள் பாடல்களின் ஹிட் ரகசியம் என்ன? ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப்பாடலுக்கான முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும் கேட்கிறேன். இயக்குநர்கள் அந்த பாடலுக்கான சூழலை சொன்னதும்... என்னை பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்திற்குள் கொண்டு செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி ரகசியம் என்று எதுவும் இல்லை. நீங்கள் தமிழ் ...
நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!

நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!

Latest News
பெரிய ஆள் என்றால் நாலு பேரு நாலு விதமா தான் சொல்லுவான் அதுக்கு எல்லாம் அசரக்கூடாது தளபதி அசர மாட்டார் காரணம் அவர்தான் அசரா புலி ஆச்சே!! மீம்ஸ் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கி விஜயகாந்த் முதல் விஜய் நம் ஆட்கள் வச்சு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பிரேமத்தால் சிக்கி சின்னா பின்னம் ஆனா சுருதியை சற்று காப்பாத்தி உள்ளார் நம் பாச தலைவன்.., மலையாளத்தில் சக்கைபோடு போட்ட ப்ரேமம் படத்தை தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு நிமிட பாடல் காட்சி யூடியூப்பில் வெளியிடப் பட்டது. இதில் மலர் டீச்சராக ஸ்ருதி நடித்துள்ளார் மலையாளத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியின் நடிப்பையும், தெலுங்குப் படத்தில் மலர் டீச்சராக வரும் ஸ்ருதியின் நடிப்பையும் ஒப்பிட்டு, சமூக ஊடகங்கள் ஸ்ருதியை செம கலாய்ப்பு செய்து வந்தனர். அய்யோ ஆளை விடுங்க என்று ஸ்ரு...
தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்

தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்

Latest News
தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள். படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி உருவானது? படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம். ‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் டாஸ்மாக் பணியும் ஒன்று. படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும் அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள். கடை கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக...
ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?

ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?

Latest News
குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். நாயகியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார். இவர் எமிஜாக்சன் உள்பட பல பிரபல நடிகை களுக்கு டப்பிங் பேசி வருபவர். இவர்களுடன் கவிஞர் விக்ரமதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சு மிட்டாய் ஆறுமுகம் உள்பட 40 நடிகர் -நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ளார். இவர் மணிகண்டனின் குறும் படங்களுக்கு இசையமைத்தவர். வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறுகையில், ஒரு கிடாயின் கருணை மனு படம் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே இல்லாமல் இந்த படத்தில் ந...