Sunday, November 8
Shadow

Top Highlights

சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராகஇசையமைப்பாளர்  தினா தேர்வு

சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராகஇசையமைப்பாளர் தினா தேர்வு

Latest News, Top Highlights
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர். அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.. செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி - P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.. குருநாதன்- ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.. உப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன் இனை செயலாளர்களாக p.செல்வராஜ் p.v.ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.. அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்...
அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரிலீசுக்கு தீவிரம் காட்டும் இயக்குனர் சிவா

அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரிலீசுக்கு தீவிரம் காட்டும் இயக்குனர் சிவா

Latest News, Top Highlights
இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆனது. வரும் போது வரட்டும். படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஐதராபாத்தில் தயாராக இருந்த அரங்கில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த உள்ளனர். மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்ற...
ஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்

ஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் ...
விஜய்62 விறுவிறுப்பான ஷூட்டிங் அப்டேட்

விஜய்62 விறுவிறுப்பான ஷூட்டிங் அப்டேட்

Latest News, Top Highlights
விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு காட்சி ஒன்றை நள்ளிரவு படமாக்கி இருக்கிறார்கள். அந்த குண்டுவெடிப்பில் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுவது போல காட்சி அமைந்திருந்தது. மேலும் ஒரு மெலடி பாடலும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்க...
மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் தனுஷ்

மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் தனுஷ்

Latest News, Top Highlights
நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆனார். ப. பாண்டி படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்தார். தொடை தெரிய வேட்டிக் கட்டி நடித்து வந்த ராஜ்கிரணை ஜீன்ஸ், டி சர்ட் போட்டு மாடர்னாக காட்டியிருந்தார் தனுஷ். ப. பாண்டி படத்தை பார்த்தால் அது தனுஷ் இயக்கிய முதல் படம் என்றே கூற முடியாத அளவுக்கு நன்றாக இருந்தது. ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது எல்லாம் பார்க்கும்படியான படமாக ப. பாண்டி அமைந்துவிட்டது. அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ். ப. பாண்டி படத்தில் பிளாஷ்பேக்கில் மட்டுமே வந்த தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது தனுஷின் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ப. பாண்டியை போன்றே இந்த படமும் நிச்சியம் ஹி...
லிசா திகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி

லிசா திகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலி 'நாடோடிகள் 2', விஜய் சேதுபதி ஜோடியாக இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், 'லிசா' எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி. ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த 'பலூன்' என்ற பேய்ப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஞ்சலி பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். 'லிசா' படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கவுள்ளார். சற்று முன்பு ட்விட்டரில் 'லிசா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திகில் படமாக உருவாகவிருக்கும் 'லிசா' படத்தை...
5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா

5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா

Latest News, Top Highlights
காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதிய புரட்சியை ரஜினிகாந்த் ஆட்சியில் காண முடியும் என்று நடிகர் ஜீவா பேசினார். திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத ஏழை மாணவிக்கு சிபி ரமேஷ்குமார் நிதி உதவி வழங்கினார். இதைப் பார்த்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வராஜ் என்ற நிர்வாகி, தானும் நிதி உதவி வழங்குவதாக ஒரு தொகையை வழங்கி அந்த மாண...
இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அதுக்குள் கூட்டணியா ரஜினிக்கு கமல் நக்கல்

இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அதுக்குள் கூட்டணியா ரஜினிக்கு கமல் நக்கல்

Latest News, Top Highlights
நடிக்கும் வரை ரஜினியும் கமலும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் அரசியல் என்று வரும் போது இருவரும் மாறுபட்ட கருத்துகளுடன் காணப்படுகின்றனர். சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் கமலை ரஜினி வாரியதும், சமீபத்தில் ரஜினி இமயமலை செல்லும்போது காவிரி குறித்த கேள்வி அவர் பதில் அளிக்காததற்கு கமல் விமர்சனம் செய்தார். இந்நிலையில் அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கமல் கலந்து கொண்ட போது ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் அவர் ஆன்மீக அரசியல் என்கிறார், சற்று பயமாக இருக்கிறது என்றார். இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் மகளிர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினியிடம் கமலின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அதற்குள் கூட்டணி குறித்து பேச முடியாது. வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை கட்டமைத்து அனைத்திற்கும் தயாராக இருக்...
ஜீவா நடிக்கும் “கொரில்லா” படத்துக்காக பிரம்மாண்டமான அரங்கம் :

ஜீவா நடிக்கும் “கொரில்லா” படத்துக்காக பிரம்மாண்டமான அரங்கம் :

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார்.  படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.  இதன் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் ராதாரவி ஆகியோருடன் 1000 துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு...
காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! = ரஜினிகாந்த்

காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! = ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது. கட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து பேசலாம். எனது மன்றத்திலும், தொடங்க உள்ள கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம்..மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்: ரஜினிகாந்த்* *சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின் ரஜினிகாந்த் பேட்டியளித்து வருகிறார். மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் இருக்க...