Sunday, November 8
Shadow

Top Highlights

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த சமந்தா

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த சமந்தா

Latest News, Top Highlights
சமந்தா தமிழ் மட்டும் தெலுங்கில் முன்னணி நடிகை அதோடு விஜயின் செண்டிமெண்ட் ராசி நடிகை என்றும் சொல்லுவார்கள் கடந்த ஆண்டு 2017ல் விஜய்யுடன் நடித்த ஒரேயொரு தமிழ்ப்படம் மட்டுமே சமந்தாவுக்கு ரிலீஸானது. ஆனால், இந்த வருடத்தில் அவரின் நடிப்பில் குறைந்தது 4 படங்களாவது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலுடன் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் மார்ச் 28ல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் சமந்தா நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுதவிர சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்கள் இல்லாமல், சமந்தா நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகும் என நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘யு டர்ன் ’ கன்னடத்தில் தமிழ் ரீமேக் பற்றிய அறிவிப்பையும் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் ச...
விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு இணைகிறார். இவர் விஜய்யுடன் இணைந்து ஏற்கனவே கத்தி, பைரவா மற்றும் மெர்சலில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்முரமாக சென்னை அருகில் உள்ள இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று அனல் அரசின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கிக்கொண்டுருக்கிறது...
மதுரவீரனோடு காதல் கொள்ளும் கேரளத்து பைங்கிளி!

மதுரவீரனோடு காதல் கொள்ளும் கேரளத்து பைங்கிளி!

Latest News, Top Highlights
நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் P.G. முத்தையாவுக்கு நன்றி. இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா ? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் எளிமையானவர் , மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவ...
செல்பி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே படம் உள்ளே

செல்பி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே படம் உள்ளே

Latest News, Top Highlights
கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார். இவர் போட்டோக்கள் அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும். அதிகபட்சம் இவருடைய கவர்ச்சி படங்கள்தான் வெளியாகும். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்புகைப்படம் பார்க்கவே மிக பயங்கரமாக உள்ளது. அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
தட்டிக் கொடுத்த விக்ரம்: நெகிழும் நடிகர் மாஸ் ரவி

தட்டிக் கொடுத்த விக்ரம்: நெகிழும் நடிகர் மாஸ் ரவி

Latest News, Top Highlights
விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி. ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி. தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, "எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். டி.வி.யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன். பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த "ஜிஞ்ஜினுக்கான்" பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், ...
‘விஜய் 62’ படத்திற்கு ரஜினி பட வசனகர்த்தா!

‘விஜய் 62’ படத்திற்கு ரஜினி பட வசனகர்த்தா!

Latest News, Top Highlights
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் ‘விஜய் 62’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். ‘விஜய் 62’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரதன் இயக்கிய ‘பைரவா’ படத்தில், முதன்முதலில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸானது. ‘பைரவா’ ரிலீஸ...
ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் – ஹீரோயின் யார் தெரியுமா?

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் – ஹீரோயின் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
கடந்த சில காலங்களில் சென்னையில் பல பகுதிகளில் புதிய கிளைகளை திறந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிருவனம், நிறுவன விளம்பரங்களில் புதிய மாடல் ஒருவரை களம் இறக்கியும் வருகிறது. அவர் வேறு யாருமல்ல, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவண அருள் என்பவர் தான். ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் தோன்றி அவர் வசனம் பேச தொடங்கி தற்போது நடனம் ஆடுவதை வரை வந்துவிட்டார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற மலேசிய நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கோடி கணக்கில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியர், விரைவில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக உள்ளார். ஆம், சரவண அருள் விரைவில் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதற்காக, பலரிடம் கதை கேட்டு வரும் அவர், உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதையை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் விளையாட்டாக தான் ஹீரோவானால் ஜோடியாக நயந்தாராவை போடுவேன், என்று கூறியிரு...
கருத்துக்களை பதிவு செய் ” படம் மூலம் அறிமுகமாகும் ஆரியன்  தொடங்கிவைத்த இயக்குனர் சுசி கணேசன்

கருத்துக்களை பதிவு செய் ” படம் மூலம் அறிமுகமாகும் ஆரியன் தொடங்கிவைத்த இயக்குனர் சுசி கணேசன்

Latest News, Top Highlights
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்...
படப்பிடிப்பு தொடங்காத நிலையிலும் இணையத்தை கலக்கும் அஜித்

படப்பிடிப்பு தொடங்காத நிலையிலும் இணையத்தை கலக்கும் அஜித்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யும், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில், அஜித் படத்தின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை. அஜித் அடுத்ததாக `சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா - அஜித் மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்திற்கு `விஸ்வாசம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விவேகம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித், சிவா, எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் வெற்றி மீண்டும் இணைந்திருக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில், அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் விரைவி...
இந்தியாவிற்கு இது மிகவும் அவசியம் – நடிகை காஜல் அகர்வால்

இந்தியாவிற்கு இது மிகவும் அவசியம் – நடிகை காஜல் அகர்வால்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் காண்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். நடிகை சன்னி லியோன், ராக்கி சாவந்த் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் காண்டம் விளம்பரங்களில் நடித்தும், அதுகுறித்து அடிக்கடி புகார்கள் தெரிவித்தும் வந்தனர். அதேநேரத்தில் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வது தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்ப முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது. அதில் தொலைக்காட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால், இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்ப வேண்டும். அதை பார்த்தாவது சிலர...