Sunday, November 8
Shadow

Top Highlights

கூட்டத்தை கலைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா

கூட்டத்தை கலைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். சூர்யா - செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? ரசிகர்கள் பிரமிப்பு

முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? ரசிகர்கள் பிரமிப்பு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் தாடி, முடியில் வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இளமையாக இருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்காக விஜய் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில், அதாவது முதியவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் ஊனமுற்றவராக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி, படக்குழு அதனை மறுத்த நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷூம், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆ...
விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் முன்னணி இயக்குநர்

விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் முன்னணி இயக்குநர்

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இவருடைய அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பதில் இப்போவே போட்டி நிலவுகிறது. அதில் இரு இயக்குநர்களின் பெயர்கள் அடிபடிகிறது. ஒருவர் விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா. மற்றொருவர் கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத். இவர்களில் ஒருவர் தான் விஜய்யை அடுத்து இயக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் விஜய்யை சந்தித்த மோகன்ராஜா ‘நீண்ட காலம் கழித்து நண்பர் விஜய்யை சந்தித்தேன். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். நிறைய பேசினோம். ‘வேலைக்காரன்’ படம் பற்றி அவர் பெருமைப்பட்டார். அ...
தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....
வெற்றிமாறன் தயாரிக்க சமுத்திரக்கனி நடிக்கும்  “ சங்கத்தலைவன் “

வெற்றிமாறன் தயாரிக்க சமுத்திரக்கனி நடிக்கும் “ சங்கத்தலைவன் “

Latest News, Top Highlights
தமிழ்ச்சூழலில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதனின் “ தறியுடன் “. நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனையை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்த நாவல். இந்த நாவலை இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, GRASSROOT FILM COMPANY சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது....
விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்

விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் 25-வது படமான 'சீதக்காதி' பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 16 அன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணிதரன் 'சீதக்காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்...
“மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. – இயக்குனர் R. மாதேஷ்

“மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. – இயக்குனர் R. மாதேஷ்

Latest News, Top Highlights
என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. Horror பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. "காதலன்" படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங...
கஜினிகாந்த் டீமிற்கு டாடா காண்பித்த சாயீஷா

கஜினிகாந்த் டீமிற்கு டாடா காண்பித்த சாயீஷா

Latest News, Top Highlights
கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கைவசம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பார் சாங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நடிகை சாயீஷா சம்பந்தப்பட்ட அனைத்...
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
`புகழேந்தி என்னும் நான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...
மீண்டும் சுசி லீக்ஸா: நடிகைகள் கலக்கம்

மீண்டும் சுசி லீக்ஸா: நடிகைகள் கலக்கம்

Latest News, Top Highlights
திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுசித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர். சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் ...