Saturday, November 7
Shadow

Top Highlights

விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் என இந்த மூன்று பேரும்‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடிக்கின்றனர். `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் எளிமையாக நடைபெற்றது. மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், ராம் பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டார். வருகிற ஜனவரியி...
சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!

சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!

Latest News, Top Highlights
நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு அகிரா டெக்னாலஜிஸ் என்னும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம் நடத்தும் செந்தில் நாயகம், கணபதி, மற்றும் மார்ஸ் ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை காண முயற்சித்தார். ஒராண்டில் ஒர் நிகரில்லா தீர்வுடன் வந்துவிட்டது. ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ரசிகர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே பல தகவல்கள் அளிக்கவும் நாம் கேட்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா சார்ந்த குறிப்பிட்ட சந்தேகங்களுக்கும் விடையளிக்க...
வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி

வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி

Latest News, Top Highlights
தனது தரமான சிறந்த ஒளிப்பதிவின் மூலம் ஒட்டு மொத்த படக்குழுவையும் ஆச்சர்யப்படுத்தும் எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் தன்னுடைய துறையை மட்டுமே பெருமிதத்துடன் நினைவு கூர்வார். இதற்கு முற்றிலும் மாறாக, குழந்தை உள்ளத்தோடு ஒட்டு மொத்த குழுவின் உழைப்பையும் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. இயக்குனர் ராஜாவின் திறமையான இயக்கத்தை பற்றி ராம்ஜி கூறும்போது, "சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குனர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒவ்வொரு நாளும் ம...
ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

Latest News, Top Highlights
ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17 அன்று) நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பேசிய போது, " பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர்விந்த் சாமி இப்...
விஷ்ணு விஷால் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்

விஷ்ணு விஷால் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்', `சீமராஜா' படங்களை தயாரிக்கும் 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிற...
தமிழ் நாட்டில் ரஜினி மற்றும் கமல் இன்னும் எல்லா நடிகர்களையும் ஓரம் கட்டிய விஜய்

தமிழ் நாட்டில் ரஜினி மற்றும் கமல் இன்னும் எல்லா நடிகர்களையும் ஓரம் கட்டிய விஜய்

Latest News, Top Highlights
ரஜினி, கமல், விஷால், விஜய் என அடுத்தடுத்த மாஸ் ஹீரோக்கள் அரசியலை நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அனால் இவர்களுக்கு மக்களிடம் யாருக்கு அதிக மாஸ் இருக்கு என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது அதன் விவரம் வாங்க பாக்கலாம். அப்படி அரசியலுக்கு வர ஆசைப்படுகிற நடிகர்களில் யாருக்கு சமூக அக்கறை அதிகம் இருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று தானே? அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் சமூக அக்கறை கொண்ட நடிகர்கள் யார்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் 18% வாக்குகள் பெற்று விஜய் முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தில் 14% வாக்குகளுடன் விஷால் உள்ளார். 9% வாக்குகளுடன் ரஜினி, 8% வாக்குகளுடன் கமல், வெறும் 6% வாக்குகளை அஜித் பெற, சூர்யா, தனுஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்....
ஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “

ஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “

Latest News, Top Highlights
CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ களிறு “ இந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரைசுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேஷன், காதல் அருண், ஜான், உமாரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - G.J.சத்யா காதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டு இல்லையே கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மற்றப் படுகின்றன. அதன் பின்னணியில் இருபவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் “ களிறு ஆணவக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன. ஆணவக் கொலை சம்மந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூக...
ஓகே சொன்ன தளபதி வருகைக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ஓகே சொன்ன தளபதி வருகைக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

Latest News, Top Highlights
தளபதி விஜய் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரே மாஸ் கொண்டாட்டம் தான். இவர் எதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார்கள் தளபதி ரசிகர்கள். விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்த காலை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வருவதாக கூறி விட்டனர், மேலும் இதனையடுத்து தற்போது தளபதி விஜயும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் கூறி விட்டதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர். இதனால் மலேசியா நகரின் தளபதி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கோடம்பாக்கம் திகைப்பில் உள்ளனர் மலேசிய சினிமாரசிகர்கள் இந்த எப்போது என்று ஒட்டு மொத்த மக்களும் காத்து இருக்கின்றனர்...
விஜய் அண்ணாகிட்ட இந்த விஷயத்தை கண்ணீர் வீட்டு அழுது பேசணும் பிரபல நடிகை உருக்கம்

விஜய் அண்ணாகிட்ட இந்த விஷயத்தை கண்ணீர் வீட்டு அழுது பேசணும் பிரபல நடிகை உருக்கம்

Latest News, Top Highlights
தளபதி விஜய்க்கு உலகஅளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும், திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த பட்டியலில், “ஆபிஸ்” சீரியல் நடிகை ஸ்ருதிராஜும் ஒருவர் நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் அறிமுகமான இவர் அந்த படத்தில் நடிக்கும் போது அண்ணா, தங்கச்சி என தான் அழைத்துக்கொள்வார்களாம். தற்போது நடிகை ஸ்ருதிராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், மாண்புமிகு மாணவன் படத்தில் நடிக்கும்போதே விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தனது, தங்கை இறந்த சோகத்தை எப்போதும் தன்னுள் வைத்திருப்பார். எனக்கும் அண்ணன் இல்லாத ஃபீலிங் இருந்தது. இப்போது கூட அவரை என்னுடைய சொந்த அண்ணனாக நினைக்கிறன். இப்போது, அவர் பெரிய நடிகராகிவிட்டார். என்னை இப்போது ஞாபகம் வைத்திருப்பாரா..? என்று தெரியவில்லை. கண்டிப்பாக விஜய் அண்ணாவை நான் ஒரு நாள் சந்தித்து பழைய நினைவுகள் கண்ணீத் விட்டு அழுது அவரிடம் பேசி தீர்க்கவேண்...
பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ள ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம், தமன்னாவுடன் இப்படத்தில், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்....