Saturday, November 7
Shadow

Top Highlights

சென்னையில் ஜல்லிக்கட்டு

சென்னையில் ஜல்லிக்கட்டு

Latest News, Top Highlights
தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதற்க்கு முதல்கட்டமாக தற்போது சென்னையில் தமிழர்களின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் 'தமிழ்நாடுஜல்லிக்கட்டு பேரவை' மற்றும் 'சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு' இணைந்து வருகின்ற ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைதலைவர் டாக்டர் P. ராஜசேகர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை நடத்த உள்ளது.இந்த நிகழ்வை NOISE & GRAINS நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவாட்டங்களில் இருந்து பல நூறு மாடுபிடி வீரர்களையும் சுமார் ஐநூறு மாடுகளையும் வரவழைத்து அவர்களுக்குவேண்டிய வசதிகளை மிக பாதுகாப்பான முறையில் செய்து ஆயிரக்கணக்கானோர் பார்க்க கூடிய வகையில் பாதுகாப்புடன் அரங்கம்அமைக...
யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’.

யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’.

Latest News, Top Highlights
லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று & இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்

Latest News, Top Highlights
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “இரும்புத்திரை“. இப்படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் பற்றி இயக்குனர் மித்ரன் கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது, அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். ...
கதைக்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட இமை நாயகன்

கதைக்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட இமை நாயகன்

Latest News, Top Highlights
'இமை' படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் 'இமை'. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன். இவ்வளவும் செய்து மாறிய பின், என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் எ...
மாயவன் – திரை விமர்சனம் Rank 2/5

மாயவன் – திரை விமர்சனம் Rank 2/5

Review, Top Highlights
குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன், திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார். கொலையாளியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார். லாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்க...
மீனாவை வருத்தப்பட வைத்த தளபதி ஏன் தெரியமா

மீனாவை வருத்தப்பட வைத்த தளபதி ஏன் தெரியமா

Latest News, Top Highlights
ரஜினி, கமல்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீனா விஜயுடன் மட்டும் நாயகியாக நடிக்கவில்லை ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியுள்ளார், தற்போதும் நடிப்பதை தொடர்ந்துக் கொண்டிருக்க, அவரது மகள் நைனிகாவும் நடிக்க தொடங்கியுள்ளார். விஜயின் ‘தெறி’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும் நைனிகா நடித்துள்ளார். இந்த நிலையில், விஜய் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ஒன்றால், தற்போதும் நடிகை மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதை மீனாவே கூறியுள்ளார். நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீனா, “சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம...
மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தை முடித்த தனுஷ், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், `கொடி-2' படத்திலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை தனஷே இயக்கி, நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், சமீபத்தில் ராஜ் கிரணை வைத்து ‘பா.பாண்டி’ படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத...
மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

Latest News, Top Highlights
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்....
கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

Latest News, Top Highlights
உலக அளவில் மீடியா துறையில், சின்னத்திரை தயாரிப்பிலிருந்து, சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளனர். அவர்களது முதல் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என பல தரப்பட்ட படங்களிலும் கலக்கி முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரண், மிஸ்கின் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு `அடங்க மறு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படம் குறித்து, `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் உ...
விஜய் தான் இளைஞர்களை ஊக்குவிக்கும் நபர் சொன்ன பிரபல ஹீரோ

விஜய் தான் இளைஞர்களை ஊக்குவிக்கும் நபர் சொன்ன பிரபல ஹீரோ

Latest News, Top Highlights
சிபிராஜின் “ சத்யா “ திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி , இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , இயக்குநர் அறிவழகன் , ஷணம் ( தெலுங்கு ) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிபிராஜ் பேசியது :- சத்யா திரைப்படத்தின் பத்திரிகையாளர் ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும் , படத்தை பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய ...