Saturday, November 7
Shadow

Top Highlights

ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

Latest News, Top Highlights
J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் "பில்லா பாண்டி" படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். "பில்லா பாண்டி" திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் R.K.சுரேஷ் சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து வருகிறார்.சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் ...
ஜெய் நடிக்கும் “ஜருகண்டி” திரைபடத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆர். டி .ராஜசேகர்

ஜெய் நடிக்கும் “ஜருகண்டி” திரைபடத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆர். டி .ராஜசேகர்

Latest News, Top Highlights
நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh மூலம் "ஜருகண்டி" என்கிற திரை படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான் . ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துக் கொண்டு இருந்த இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். "திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர் டி ராஜசேகர் அவர்களுடைய அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது.அதுவே எங்களுக்கு பெருமை" என்றார். இளம் இசை அமைப்பாளர் போபோ சஷி இசை அமைக்க, பிரவீன் கே எல் படத்தொகுப்பில், அமித் கும...
ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் சனா அல்தாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.கே.நகர் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றிய இருக்கிறது. வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்ஙறு எதிர்பார்க்கப்படுக...
ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

Latest News, Top Highlights
ஆர்யா அடுத்தாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் `கஜினிகாந்த்' என்ற படத்தில் நடிக்கிறார். சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா மற்றும் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் ஆர்யாவும், படத்தின் நாயகி சாயிஷாவும் இணைந்து காதல் செய்வது போன்ற போஸ்டரை அவர்கள் வெளியிட்டனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
உதயநிதியை இயக்கும் சீனு ராமசாமி

உதயநிதியை இயக்கும் சீனு ராமசாமி

Latest News, Top Highlights
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நிமிர் படத்தில் நடிக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார். ‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இ...
கரு பழனியப்பன் இயக்கக்த்தில் அருள் நிதி நடிப்பில் “புகழேந்தி என்னும் நான்” படத்தின் பூஜை நடந்தது

கரு பழனியப்பன் இயக்கக்த்தில் அருள் நிதி நடிப்பில் “புகழேந்தி என்னும் நான்” படத்தின் பூஜை நடந்தது

Latest News, Top Highlights
ஒரு நல்ல திரைப்படம் தனக்குரிய புகழை தானே தேடிக் கொள்ளும்.அந்த புகழுக்கு மகுடம் சேர்க்கும் அளவுக்கு வேறு பல காரணங்களும் இணைந்து விடும். அதில் பொருத்தமாக அமையும் தலைப்பும் உண்டு. அந்த வகையில் அருள் நிதி நடிப்பில், பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கக்த்தில் இந்த படம் உருவாகிறது தொடர்ந்து தரமான வெற்றி படங்களை கொடுக்கும் Axess film factory இந்த படத்தை தயாரிக்கிறது "புகழேந்தி என்னும் நான்" திரைப் படமும் இடம் பெறுகிறது. அரசியல் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தில் பிந்து மாதவி அருள் நிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்தது. மற்ற நட்சித்திர விவரங்கள் விரைவில் வெளியாகும் நிச்சயம் இந்த படத்தின் கதை மக்களுக்கு மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்...
வைபவ் நடிக்கும் ‘காட்டேரி‘ பூஜையுடன் தொடங்கியது

வைபவ் நடிக்கும் ‘காட்டேரி‘ பூஜையுடன் தொடங்கியது

Latest News, Top Highlights
சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்றபடத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். கலை இயக்குநராக செந்தில் பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகவிருக்கும் இப்படத்தின் தொடக்கவிழா இன்று ஸ்டீடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. இதன் போது, இயக்குநர்கள் கே வி ஆனந்த், புஷ்கர் காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், ரவிமரியா, நடிகர்கள் ஜீவா, வைபவ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன், தயாரிப்பாளர்கள் சி வ...
விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தின் டைட்டில் இணையதளத்தில் கசிந்தது

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தின் டைட்டில் இணையதளத்தில் கசிந்தது

Latest News, Top Highlights
தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் விஜய்-முருகதாஸ் படம் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது, அடுத்து சமுதாயத்தில் நடக்கும் எந்த பிரச்சனையை இப்படம் பேசும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது விஜய் 62 படத்தின் தலைப்பு இது தான் என்று ஒரு டைட்டில் இணையத்தை சுற்றி வருகின்றது, இவை உண்மையா என்று கூட தெரியவில்லை. விவாசாயிகள் பயன்படுத்தும் 'கலப்பை' என்பது தான் விஜய் 62 டைட்டில் என்று ஒரு செய்தி தீயாய் பரவி வருகின்றது, எது எப்படியோ முருகதாஸ் சொன்னாலே உண்மை வெளிவரும்....
கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!

கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!

Latest News, Top Highlights
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு 'ஆட்டோ'வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்ப...
உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

Latest News, Top Highlights
உதயநிதி நடிப்பில் இறுதியாக ‘இப்படை வெல்லும்’ படம் வெளியானது. கவுரவ் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதில் இவருடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது மும்முரமாக நிமிர் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இ...