Thursday, March 4
Shadow

சக்ரா – திரை விமர்சனம் (அவசியம் பார்க்க வேண்டிய படம்) (Rank 4/5)

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் M.S.அமுதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சக்ரா. சைபர் கிரைம் மற்றும் இ-காமர்ஸ் மோசடிகளை மையமாக கொண்ட இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஷாலுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

ஒரே நாளில் 50 கொள்ளைகளுடன் படம் துவங்குகிறது. அதுவும் ஆகஸ்ட் 15 அன்று இந்த கொள்ளை நடக்கிறது. இந்த கொள்ளைகளில் ஒன்று விஷாலின் வீட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷால் (சந்திரு) ஒரு ராணுவ அதிகாரி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் (காயத்ரி) ஒரு போலீஸ் அதிகாரி இருவரும் இணைந்து ஒரு கொள்ளை வழக்கை விசாரிக்கத் தொடங்குகின்றனர்.கொள்ளையின்போது, ​​தனது தந்தைக்கு வழங்கப்பட்ட அசோக சக்ரா பதக்கம் திருடப்பட்டிருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். படத்தின் முதல் பாதி நேரம் குறைவாக இருக்கிறது. இது ஹேக்கரை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்த சஸ்பென்ஸுடன் முடிகிறது.

லீலா (ரெஜினா கசாண்ட்ரா) அறிமுகம் மற்றும் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தாய் உணர்வை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரே நாளில் 50 கொள்ளை அரங்கேற்றியது யார்? ஏன் அப்படி செய்தார்? கொள்ளையர்களை விஷால் பிடித்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதை மிக நேர்த்தியாக தேர்ந்துடுத்துள்ளர் விஷால் அதற்கு முதலில் அவருக்கு ஒரு சபாஷ் போடவேண்டும் அதே போல படத்தின் தன்மையறிந்து மிக நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்துக்கு மேலும் பலம் தன கதாபாத்திரம் அறிந்து நடித்துள்ளார் நிச்சயம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான இடத்தை பிடிப்பார் .

ரெஜினா யாரும் எதிர்பார்க்கமுடியாத கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமான கதாபத்திரம் அசத்தலான நடிப்பு மூலம் விஷாலுக்கே சவால் கொடுத்துள்ளார் . அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பு

படத்தின் மிக முக்கிய பலம் இயக்குனர் ஒரு படத்தின் ஆணி வேர் இயக்குனர் என்பார்கள் அதை மிக அற்புதமாக உறுதிசெய்துள்ளார் .அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலே நம்மை கதைக்குள் கட்டி இழுக்கிறார்.படத்துக்கு மேலும் பலம் படத்தின் திரைகதை காட்சிக்கு காட்சி சபாஷ் என்று சொல்லும் அளவுக்கு திரைகதை அமைத்துள்ளார் . இயக்குனர்

படத்தின் பிளஸ்: படத்தின் கதைக்களம், விஷால், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் இசை

சைபர் கிரைம் மற்றும் இ-கார்மஸ் மோசடிகளை தோலுரித்து காட்டும் சக்ரா, கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

CLOSE
CLOSE