
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கிறார்கள்.
மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இப்படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, அதே நாளில் ரஜினிகாந்தின் ‘காலா’வும் ரிலீஸாகவிருப்பதால், ‘Mr.சந்திரமௌலி’யின் ரிலீஸ் தேதியை மாற்றவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.