
மதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகாததால் விநியோகஸ்தர் கடத்தல்
மதுரையில் ரஜினிகாந்தின் காலா திரைப்பட டிக்கெட்டுகள் விற்பனையாகாத விவகாரத்தில் விநியோகஸ்தர் செல்வராஜ் கடத்தப்பட்டார். அவரை கடத்தியதாக அஜித், விக்னேஷ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று வெளியானது. ரஜினிகாந்த் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.
மதுரையில் எஸ்கே பிலிம்ஸ் செல்வராஜ் என்ற விநியோகஸ்தரிடம் பீபி குளம் அஜித், விக்னேஷ் இருவரும் சுமார் ரூ4 லட்சம் பணம் கொடுத்து 500 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அஜித்தும் விக்னேஷூம் செல்வராஜிடம் விற்பனையாகாத டிக்கெட்டுகளைக் கொடுத்து பணத்தை திருப்பிக் கேட்டனர்.
இந்த தகராறில் செல்வராஜை அஜித்தும் விக்னேஷும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக செல்வராஜின் நண்பர் போலீசில் புகார் தெரிவித்தார்.இதனடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு செல்...