பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் 2002 ம் ஆண்டில் வெளியான படம் சார்லி சாப்ளின் படம் அப்போது இந்த படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இயக்கி வெளியிட்டுள்ளார்

இந்த இரண்டாம் பாகத்தில் பிரபு மற்றும் பிரபு தேவா தவிர பல மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா. பிரபு.நிக்கி கல்ராணி. அடா சர்மா.விவேக் பிரசன்ன.ரவி மரியா அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் அம்ரீஷ் இசையில் சௌந்தரராஜன் ஒளிப்பதிவில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நகைச்சுவை பொழுது. போக்கு படம் தான் சார்ளி சாப்ளின் 2 ji

மணமகன் போதையில் மணமகளுக்கு தெரியானால் தவறான மெசேஜ் அனுப்பியதால் அவர்களது திருமணத்தில் பிரச்சினை உருவாகிறது. இதை மேட்ரிமோனியல் இணையதள நடத்தி வரும் ஹீரோவான பிரபு தேவா எப்படி கையாகிறார் என்பதே படத்தின் கதை.

விமர்சனம்

பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சார்லி சாப்லின். ஷக்தி சிதம்பரம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. 17 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

மேட்ரிமோனியல் இணையதளம் நடத்தி வரும் திரு(பிரபுதேவா), 99 திருமணங்களை தன்னுடன் பணியாற்றிப்பவர்கள் (அர்விந்த் ஆகாஷ் மற்றும் சந்தனா ராஜ்) ஆகியோருடன் சேர்ந்து நடத்தியுள்ளார். ஆனால் அவர் ராமகிருஷ்ணன் (பிரபு)வின் மகள் சாரா(நிக்கி)-யை காதலிக்கிறார். திருவின் நண்பர் விவேக், சாராவின் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். அதற்கான ஆதரம் ஒன்றையும் அனுப்புகிறார். இதனால் மனம் உடையும் திரு, சாரா உடனான திருமணத்தை ஏற்க மறுக்கிறார், இந்நிலையில் சாரா இவர்கள் வாழ்வில் நுழைகிறார். இதனால் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. இதை மிகவும் நகைசுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

படம் முழுவதையும் பிரபுதேவா தோளில் தாங்குகிறார். நடனத்தில் மட்டும் இல்லை நகைசுவையிலும் நான் கிங் என்று நிருபித்துள்ளார். அதேபோல நாயகி nikki கல்ரானியும் நகைசுவையிலும் சரி நடிப்பிலும் சரி தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் .

தெலுங்கு நாயகி அடா ஷர்மா குறைந்த காட்சிகள் என்றாலும் நிறைவாக நடித்து இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சிக்கு மிகவும் பக்க பலாமாக இருந்து இருக்கிறார்.பிரபு nikki கல்ராணி அப்பாவாக வரும் பிரபு நகைசுவையில் பின்னி இருக்கிறார். நல்ல வேலை பிரபுதேவா நண்பர் என்று எல்லாம் கொடுக்காமல் நல்ல கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் .

ரவி மரியா தோன்றும் காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. நிக்கி, பிரபு மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் எல்லாம் ஒரே குத்துமயம் பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் .

இயக்குனர் சக்தி சிதம்பரம் பிராண்ட் மாசால பிளஸ் காமெடி கலந்த ஒரு நகைசுவை படம் லாஜிக் எல்லாம் இல்லாமல் காமடி மேஜிக் செய்துள்ளார் இரண்டு மணி நேரம் சிரித்து பொழுதை கழிக்கலாம்

Related