
“இசையால் உ யிர் பெறும் ‘சாருகேசி’… ரஜினி வாழ்த்திய மேடையில் உணர்வுகளை கிளப்பிய இசை நாடகம்!”
தமிழ் சினிமாவில் இசையும் உணர்வுகளும் கலந்த கதைகள் எப்போதுமே தனி இடம் பிடிக்கும். அந்த வரிசையில், நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க செவ்வியல் இசை பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படமாக ‘சாருகேசி’ கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சூப்பர்ஸ்டார் கலந்து கொண்டு டிரெய்லரும் ஆடியோவையும் வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இசை நாடக வடிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மூத்த இயக்குநர் இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக மேடைகளில் பாராட்டுகளை பெற்ற ஒய்.ஜி. மகேந்திராவின் பிரபல நாடகத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. செவ்வியல் இசை, குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் பாரம்பரிய கலைகளின் மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் கதை என்பதால், இது சாதாரண வர்த்தக படமாக அல்லாமல் மனதை வருடும் அனுபவமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

படத்தில் , , , , , உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, தேனிசை தென்றல் இசையமைத்துள்ள பாடல்கள், படத்தின் உணர்வை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய , “இசையையும் கலாச்சாரத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இப்படக்குழுவின் முயற்சி வெற்றி பெற வேண்டும்,” என்று வாழ்த்தினார். அதே நேரத்தில், இயக்குநர் , இந்தப் படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருக்கும் என்றும், திறமையான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும் பகிர்ந்துகொண்டார்.
சங்கராபரணம், சிந்து பைரவி போன்ற இசை சார்ந்த கிளாசிக் படங்களை நினைவூட்டும் விதத்தில் உருவாகியுள்ள ‘சாருகேசி’, இன்றைய தலைமுறைக்கும் செவ்வியல் இசையின் அழகை புதிய வடிவில் கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் வெளியிடும் ‘சாருகேசி’, ஜூன் 12 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“‘Charukesi’ Brings Classical Music Back to the Big Screen… Rajinikanth Launches the Film’s Trailer and Audio!”
Stories driven by music and emotions have always held a special place in Tamil cinema. Joining that legacy is ‘Charukesi’, a film deeply rooted in classical music and emotional storytelling, which is already drawing attention among cinema lovers. The trailer and audio launch event of the film was recently held in Chennai, and the highlight of the evening was Superstar unveiling the trailer and audio, making it a memorable moment for the entire team.
Directed by veteran filmmaker , ‘Charukesi’ is adapted from the celebrated stage play created by . The film is said to beautifully blend classical music, relationships, human emotions, and cultural heritage into a compelling cinematic experience. Rather than being a regular commercial entertainer, the makers believe the film will emotionally connect with audiences through its soulful storytelling.
The movie features an impressive ensemble cast including , , , , , and in pivotal roles. Music for the film has been composed by veteran composer , whose soulful compositions are expected to elevate the emotional depth of the narrative.
Speaking at the event, praised the team for creating a film centered around music and culture, and extended his heartfelt wishes for the film’s success. Director shared that ‘Charukesi’ is a project very close to his heart and expressed his happiness about collaborating with such talented artists and technicians.
With its strong musical foundation and emotionally rich storytelling, ‘Charukesi’ is being viewed as a film that could remind audiences of timeless classics like and , while introducing the beauty of classical music to today’s generation in a refreshing cinematic form.
Presented worldwide by , ‘Charukesi’ is all set for a grand theatrical release on June 12.
