
‘டாய்ரா’ – நீதியைத் தேடும் இரு காவல் அதிகாரிகளின் மோதல்!
கரீனா கபூர் கான் – பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் கிரைம் த்ரில்லர்
மும்பை:
உண்மை எது? நீதி என்றால் என்ன? ஒரு குற்றச் சம்பவத்தில் சரி, தவறு என்பதை முடிவு செய்வது யார்? இதுபோன்ற பல கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டாய்ரா’. தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பரபரப்பான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிரெதிர் பார்வையில் கரீனா – பிருத்விராஜ்
‘டாய்ரா’ திரைப்படத்தின் கதைக்களம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்தைச் சுற்றி நகர்கிறது. அந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதுடன், காவல்துறையின் தீவிர விசாரணைக்கும் வழிவகுக்கிறது.
வழக்கில் புதிய புதிய தகவல்கள் வெளியாகும்போது, ஏற்கனவே உருவாகியிருந்த கருத்துகளும் மாறத் தொடங்குகின்றன. உண்மையை கண்டறியும் முயற்சியில் மூத்த காவல்துறை அதிகாரிகளான கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் களமிறங்குகின்றனர்.
ஆனால், இருவரும் ஒரே வழக்கை விசாரித்தாலும், நீதி மற்றும் கடமை குறித்த அவர்களின் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் எதிரெதிர் பக்கங்களில் நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது.
‘உண்மை’ மாறும்போது மாறும் பார்வை
‘டாய்ரா’ படத்தின் டிரெய்லர், ஒரு குற்றச் சம்பவத்தை மட்டுமே மையமாகக் கொண்ட வழக்கமான கிரைம் த்ரில்லராக இப்படம் இருக்காது என்பதை உணர்த்துகிறது.
ஒரு சம்பவம் நடந்தவுடன் அதற்கு உடனடியாக ஒரு தீர்ப்பு உருவாகிவிடுகிறது. ஆனால் அந்தத் தீர்ப்பின் பின்னால் இருக்கும் முழுமையான உண்மை என்ன? பொதுமக்களின் கருத்து எவ்வளவு தூரம் உண்மையை பிரதிபலிக்கிறது? சட்டம் மற்றும் நீதி இரண்டும் ஒரே விஷயங்களா? அல்லது இரண்டுக்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளதா?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
புதிய தகவல்கள் வெளிவரும் ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கைப் பற்றிய பார்வையை மாற்றும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் டிரெய்லரில் தொடங்கும் பதற்றம், படம் முழுவதும் தொடர்ந்து பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சவாலான கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள்
இப்படத்தில் டிசிபி அஜூனி கோலி என்ற கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கான் நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்று நடித்திராத வித்தியாசமான களத்தில் அமைந்துள்ள இந்தக் கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து கரீனா கபூர் கான் கூறுகையில், இயக்குநர் மேக்னா குல்சாருடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய பார்வையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் வகையில் மேக்னாவின் அணுகுமுறை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டிசிபி அஜூனி கோலி கதாபாத்திரத்தின் தாக்கம் தன்னுள் நீண்ட நாட்கள் இருந்ததாகவும், இதுவரை அதிகம் ஆராயாத ஒரு களத்திற்குள் அந்த கதாபாத்திரம் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் கரீனா தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான அமைதிக்குள் மறைந்திருக்கும் போராட்டம்
பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தில் டிசிபி ராமன் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிப்பார்வைக்கு அமைதியாகத் தெரிந்தாலும், விசாரணையின் போது அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், அந்தக் கேள்விகளுக்கான அவரது தேடல்களும் கதாபாத்திரத்தை சிக்கலானதாக மாற்றுகின்றன.
இந்தக் கதாபாத்திரம் தன்னை ஈர்த்ததற்கான காரணம் அதன் வெளிப்புற அமைதிக்குப் பின்னால் இருக்கும் சிக்கல்தான் என்று பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மேக்னா குல்சாரின் படைப்புகளை தொடர்ந்து கவனித்து வந்த தனக்கு, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், கரீனாவுடன் இணைந்து நடித்தது அந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கருப்பு – வெள்ளை என எளிதில் பிரிக்க முடியாது” – மேக்னா குல்சார்
‘டாய்ரா’ குறித்து இயக்குநர் மேக்னா குல்சார் கூறும்போது, இந்தப் படத்தின் கதையை கருப்பு, வெள்ளை என இரண்டு தெளிவான பக்கங்களாக பிரித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கதாபாத்திரங்கள் தங்களது முடிவுகளை எடுக்கின்றனர்; பின்னர் அந்த முடிவுகளின் விளைவுகளுடன் அவர்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை கதை பதிவு செய்கிறது. படம் முடிந்த பிறகும், நடந்த சம்பவங்கள் குறித்து பார்வையாளர்கள் தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரீனா கபூர் கான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் சிறந்த துணை நடிகர்கள் இணைந்து இப்படத்தின் உலகத்தை உயிர்ப்பித்துள்ளதாகவும் மேக்னா குல்சார் தெரிவித்துள்ளார்.
வலுவான துணை நடிகர்கள்
கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் வழக்கை வெவ்வேறு கோணத்தில் அணுகுவதால், கதையின் பதற்றமும் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான கதை
உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘டாய்ரா’, ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிப்பதைத் தாண்டி, அந்தச் சம்பவத்தைச் சுற்றி சமூகத்தில் உருவாகும் கருத்துகள், பொதுமக்களின் பார்வை, ஊடக மற்றும் சமூக அழுத்தங்கள், சட்டம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடையிலான மோதல்கள் என பல்வேறு அம்சங்களையும் பேசுகிறது.
ஒரு சம்பவம் எவ்வாறு மிக வேகமாக தீர்ப்பாக மாறுகிறது? ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு கருத்தை வைத்திருக்கும்போது, உண்மையான நீதியை யார் தீர்மானிப்பது? நாம் நேரடியாக சம்பவத்தைப் பார்க்காத நிலையில் எதை உண்மை என்று நம்புவது?
இப்படம் இதுபோன்ற கேள்விகளுக்கு எளிதான பதில்களை வழங்காமல், அவற்றை பார்வையாளர்களிடமே விட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
“பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் படம்”
ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அம்ரிதா பாண்டே கூறுகையில், தங்களைச் சுற்றியுள்ள உலகில் இருந்து உருவாகும் கதைகளுக்கு தங்களது நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், உண்மைச் சம்பவங்கள் மற்றும் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘டாய்ரா’ மோதல்கள், தார்மீகச் சிக்கல்கள், கடினமான முடிவுகள் மற்றும் இருவேறு வலுவான பார்வைகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர் என்றும், கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பான உயிர் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘தல்வார்’, ‘ராஸி’ படங்களைத் தொடர்ந்து மேக்னா குல்சாருடன் ஜங்லீ பிக்சர்ஸ் இணையும் மூன்றாவது படம் ‘டாய்ரா’ என்பது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சிஎம்டி டாக்டர் ஜெயந்திலால் கடா கூறுகையில், பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை சிந்திக்க வைக்கும் திரைப்படங்களும் முக்கியமானவை என்றும், ‘டாய்ரா’ அத்தகைய படமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டம், நீதி, தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான நுட்பமான எல்லையை ஆராயும் ‘டாய்ரா’, படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பென் மருதர் நிறுவனம் விநியோகம் செய்யும் ‘டாய்ரா’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘Daayra’: Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran Stand on Opposite Sides of Justice
Meghna Gulzar’s gripping crime thriller explores truth, justice, morality and the consequences of difficult choices
Mumbai:
What is the truth? What does justice really mean? And who gets to decide what is right or wrong? Raising these compelling questions, ‘Daayra’ is an intense crime thriller directed by National Award-winning filmmaker Meghna Gulzar, featuring Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran in the lead roles.
Produced jointly by Junglee Pictures and Dr. Jayantilal Gada’s Pen Studios, the film is scheduled to release in theatres on September 18. The trailer of the film has now been unveiled, offering a tense and intriguing glimpse into a story where truth is never absolute and justice can be viewed from different perspectives.
Kareena and Prithviraj on opposite sides of the same case
Set against the backdrop of a crime that creates nationwide outrage, ‘Daayra’ follows the chain of events that unfolds after the incident triggers a high-profile investigation.
As the search for answers intensifies and new information comes to light, the understanding of the case begins to change. Senior police officers played by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find themselves investigating the same case while approaching duty and justice from very different perspectives.
What begins as a search for the truth gradually becomes a conflict of beliefs, forcing the two characters to stand on opposite sides of a case that challenges the very idea of right and wrong.

A thriller that keeps changing the audience’s perspective
The trailer indicates that ‘Daayra’ goes beyond being a conventional crime thriller. As the investigation progresses, every new revelation adds another layer to the case and challenges what the audience believes to be true.
The film explores questions such as how quickly a story can turn into a verdict, who has the right to define justice when everyone has an opinion, and how people decide what to believe when they are merely observers of an incident.
Sharp dialogues and emotionally charged moments in the trailer further underline the film’s focus on truth, justice, public perception and moral dilemmas.
Kareena Kapoor Khan in a challenging police role
Kareena Kapoor Khan plays DCP Ajuini Kohli, a character that takes her into a territory she has not extensively explored earlier in her career.
Speaking about the film, Kareena said that one of the things she enjoyed most about working with Meghna Gulzar was the filmmaker’s ability to constantly question everything one assumes about a character.
She added that playing DCP Ajuini Kohli stayed with her long after the shoot because the role took her into an unexplored space. Kareena also expressed her happiness about sharing the screen with Prithviraj Sukumaran, describing him as a talented and intelligent actor.
Prithviraj Sukumaran as DCP Raman Kumar
Prithviraj Sukumaran plays DCP Raman Kumar, a character whose outward calm conceals considerable complexity.
According to Prithviraj, it was the complexity behind Raman Kumar’s composed exterior and the questions he encounters during the investigation that drew him towards the role.
The actor also expressed his appreciation for Meghna Gulzar’s filmmaking and said that getting an opportunity to work with her was a memorable experience. He further added that working alongside Kareena made the journey even more special.
“This is not a black-and-white story” – Meghna Gulzar
Director Meghna Gulzar describes ‘Daayra’ as a story that cannot be comfortably divided into two clear sides of black and white.
According to the filmmaker, the characters make their choices and are then forced to live with the consequences of those decisions. The film allows audiences to form their own understanding of what ultimately happens rather than providing easy answers.
Meghna Gulzar has brought together Kareena Kapoor Khan, Prithviraj Sukumaran and a strong supporting cast to explore the delicate line between law and justice.
Strong supporting cast adds to the intrigue
The film also features Jitendra Joshi, Kshitij Jog, Kanwaljit Singh, Sandeep Kulkarni and Trupti Khamkar in important roles.
Their characters bring different perspectives to the investigation, adding further layers to the central conflict and enhancing the suspense surrounding the case.
The screenplay has been written by Yash Keswani, Seema Agarwal and Meghna Gulzar.
Inspired by real-life events
Based on real-life events, ‘Daayra’ explores the aftermath of a crime that sparks widespread public anger and sets a major investigation in motion.
However, the film goes beyond the crime itself to examine public perception, social reactions, individual beliefs and the complicated relationship between law and justice.
The story asks difficult questions: How quickly can a narrative become a verdict? Who decides what justice should look like when everyone has an opinion? And when we are only spectators, how do we decide what to believe?
A film designed to spark conversations
Junglee Pictures CEO Amrita Pandey said that the production house has consistently been drawn to stories inspired by the world around us, particularly narratives rooted in real events and experiences.
She described ‘Daayra’ as a crime thriller built around conflicts, moral dilemmas, difficult choices and two powerful perspectives. She also expressed her excitement about collaborating with Pen Studios and reuniting with Meghna Gulzar for the third time after ‘Talvar’ and ‘Raazi’.
Pen Studios CMD Dr. Jayantilal Gada said that a film becomes more interesting when it not only entertains audiences but also asks the right questions. He praised Meghna Gulzar’s ability to tell deep and emotionally resonant stories with restraint and highlighted the performances of Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran.
With its focus on crime, justice, morality and human emotions, ‘Daayra’ promises to be a thought-provoking thriller that could continue to stay with audiences even after they leave the theatre.
Distributed by Pen Marudhar, ‘Daayra’ is set to release in theatres on September 18.

