Friday, November 6
Shadow

‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது

‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது

சுந்தர். சி இயக்கத்தில் பிரம்மாண்டமான மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னர் – தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், ரசிகர்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரம்மாண்டமாக திரையில் வழங்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘Rise of Mahasakthi’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசர், திரைப்படம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்க இருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படம், மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், காட்சியமைப்பு மற்றும் பிரம்மாண்டமான உலகம் ஆகியவை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதையின் மையத்தில் இடம்பெறும் மஹாசக்தியின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நயன்தாராவின் தோற்றமும், அவரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான காட்சிகளும், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முதல் பாகத்திலிருந்து முற்றிலும் புதிய களத்தையும், விரிவான கற்பனை உலகத்தையும் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் மேற்கொண்டுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தீபாவளிக்கு திரையரங்குகளில் ‘மஹாசக்தி’!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி’, வரும் நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், பான் இந்தியா திரைப்படமாக ரசிகர்களை சந்திக்கிறது.

‘Rise of Mahasakthi’ டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதன் பிரம்மாண்டமான காட்சிகளும், நயன்தாராவின் புதிய பரிமாணமும், சுந்தர். சியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி உலகமும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் மஹாசக்தியின் எழுச்சி எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்பதற்கு ‘Rise of Mahasakthi’ டீசர் ஒரு வலுவான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

The Rise of Mahasakthi Begins! Nayanthara’s ‘Mookuthi Amman 2: Mahasakthi’ Teaser Released

Sundar C’s grand mythological fantasy entertainer to hit theatres worldwide on November 6 for Diwali

The much-awaited teaser of ‘Mookuthi Amman 2: Mahasakthi’, starring leading South Indian actress Nayanthara and directed by Sundar C, has been released. Titled ‘Rise of Mahasakthi’, the teaser offers a glimpse into the film’s grand visual world and has further heightened expectations among moviegoers.

Produced by Dr. Ishari K. Ganesh under the banner of Vels Film International, ‘Mookuthi Amman 2: Mahasakthi’ is being presented as a mythological fantasy entertainer with a lavish cinematic scale.

The teaser introduces audiences to the world of Mahasakthi through striking visuals and grand production elements. The glimpses featuring Nayanthara have particularly caught the attention of fans, promising a new and powerful dimension to her character. The visuals also indicate that the sequel is set to explore a much larger fantasy world.

The film features an ensemble cast including Nayanthara, Urvashi, Yogi Babu, Duniya Vijay, ‘Myna’ Nandhini, ‘Garuda’ Ram, Abhinay, Singampuli, V. R. Swaminathan, Sunil Varma, Varshini Venkat, Pazha Karuppaiah and Nithin Sathya, among others.

Gopi Amarnath is handling the cinematography, while Hiphop Tamizha has composed the music. Fenny Oliver is responsible for the editing, and Venkat Raghavan has penned the screenplay and dialogues.

The film is produced by Dr. Ishari K. Ganesh for Vels Film International, with Khushbu Sundar, Kushmitha Ganesh, Ishaan Saxena and Vignesh Shivan serving as co-producers.

A Pan-India Diwali Release

‘Mookuthi Amman 2: Mahasakthi’ is scheduled to release worldwide in theatres on November 6, coinciding with the Diwali festive season.

The film will be released in Tamil, Telugu, Hindi, Malayalam and Kannada, making it a pan-India theatrical release.

With the ‘Rise of Mahasakthi’ teaser showcasing spectacular visuals, Nayanthara in a striking new avatar and an expansive mythological fantasy universe, anticipation surrounding the film has grown significantly.

The teaser promises that ‘Mookuthi Amman 2: Mahasakthi’ could offer audiences a grand theatrical experience this Diwali, marking the much-awaited return of the divine fantasy world to the big screen.