Sunday, October 11
Shadow

சாம்பியன் கனவுடன் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் – பிரபலங்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம்!

சாம்பியன் கனவுடன் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் – பிரபலங்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம்!

சென்னை:
தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக்கின் (TNPPL) இரண்டாவது சீசன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டிக்கு தயாராகி வரும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.

புதிய சீசனுக்கான அணியின் உற்சாகத்தையும், வீரர்களின் வேகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சி, அணியின் புதிய அடையாளமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் உலக சாம்பியனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து, முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டனர். பிரபல நடிகர் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அணியின் உரிமையாளர்களான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் NOVA Life Spaces நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ஜெர்சி அறிமுகத்தை சிறப்பித்தனர்.

விளையாட்டின் வளர்ச்சிக்கு பிக்கிள் பால் முக்கிய பங்கு – பி.வி. சிந்து

நிகழ்ச்சியில் பேசிய பி.வி. சிந்து, இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

புதிய தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கவும், பல்வேறு தரப்பினரை விளையாட்டுடன் இணைக்கவும் இதுபோன்ற லீக் போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். TNPPL போன்ற தொடர்கள் பிக்கிள் பால் விளையாட்டுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

புதிய திறமைகளுக்கு நல்ல வாய்ப்பு – ஜோஷ்னா சின்னப்பா

ஜோஷ்னா சின்னப்பா பேசுகையில், பிக்கிள் பால் விளையாட்டில் புதிய திறமைகளை அடையாளம் காண்பதற்கும், அவர்களுக்கு போட்டி அனுபவத்தை வழங்குவதற்கும் TNPPL சிறந்த தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் பயணத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய சீசனில் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் – சரத்குமார்

நடிகர் சரத்குமார் பேசுகையில், விளையாட்டுக்கு மக்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான சக்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய பயணத்தில் பங்கேற்பதில் பெருமைப்படுவதாகவும், அணியின் புதிய சீசன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாம்பியன் பட்டமே இலக்கு!

புதிய ஜெர்சி அறிமுக விழா மூலம் இரண்டாவது சீசனுக்கான தனது புதிய உத்வேகத்தை சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி வெளிப்படுத்தியுள்ளது. அணியின் புதிய தோற்றம் மட்டுமின்றி, வீரர்களின் திறமை, அணியின் ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றிக்கான உறுதி ஆகியவற்றையும் இந்த புதிய ஜெர்சி பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிக்கிள் பால் விளையாட்டு தமிழகத்தில் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், TNPPL-ன் இரண்டாவது சீசனும் விறுவிறுப்பான போட்டிகளுக்கு களம் அமைக்கிறது. இந்த நிலையில், சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் புதிய சீசனை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

புதிய ஜெர்சி அறிமுக விழாவில் வெளிப்பட்ட உற்சாகம், அணியின் வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் புதிய சீசன் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Chennai Tamil Titans Unveil New Jersey Ahead of TNPPL Season 2 in the Presence of Sporting and Film Celebrities

Chennai: As anticipation builds for the second season of the Tamil Nadu Premier Pickleball League (TNPPL), the Chennai Tamil Titans officially unveiled their new team jersey at a grand event held in Chennai.

Designed to reflect the team’s energy, youthful spirit and competitive ambition, the new jersey marks a fresh beginning for the Chennai Tamil Titans as they gear up for another exciting season of TNPPL action.

The jersey was unveiled by Olympic medallist and badminton World Champion P.V. Sindhu and renowned squash player Joshna Chinappa, who attended the event as special guests. Popular actor ‘Supreme Star’ Sarathkumar was also present on the occasion and extended his wishes to the team.

Chennai Tamil Titans owners actress Varalaxmi Sarathkumar and Senthilkumar of NOVA Life Spaces were also present at the jersey launch.

P.V. Sindhu Hails the Growth of Pickleball in India

Speaking at the event, P.V. Sindhu expressed her happiness over the rapid growth of pickleball in India. She highlighted the role of leagues such as TNPPL in taking the sport to a wider audience and bringing people together through sport.

She also congratulated the Chennai Tamil Titans and wished the team success for the upcoming season.

Joshna Chinappa on Creating Opportunities for New Talent

Joshna Chinappa said that TNPPL provides an excellent platform for identifying and nurturing emerging talent in pickleball. She expressed her happiness at being part of the Chennai Tamil Titans’ journey and wished the team the very best for the new season.

Sarathkumar Applauds the Power of Sport to Unite People

Actor Sarathkumar, while addressing the gathering, said that sport has the unique ability to bring people together. He expressed his pride in being associated with the Chennai Tamil Titans during their new-season campaign and extended his best wishes to the team.

Chennai Tamil Titans Eye the Championship

The new jersey launch has added to the excitement surrounding the Chennai Tamil Titans ahead of TNPPL Season 2. With a refreshed identity, renewed confidence and a determined squad, the team is gearing up for a strong campaign.

With pickleball steadily gaining popularity among sports enthusiasts across Tamil Nadu, expectations are high for the second season of TNPPL. The Chennai Tamil Titans will look to turn that growing enthusiasm into results on the court as they enter the tournament with one clear ambition — to fight for the championship title.

The energy and enthusiasm witnessed at the jersey launch have further raised expectations among fans, who will be looking forward to seeing the Chennai Tamil Titans make a strong impact in the upcoming season.