Sunday, June 7
Shadow

“கடன், குடும்பம், கலாட்டா… ஜூன் 26-ல் திரையரங்குகளை கைப்பற்ற வருகிற ‘கான் சிட்டி’!”

“கடன், குடும்பம், கலாட்டா… ஜூன் 26-ல் திரையரங்குகளை கைப்பற்ற வருகிற ‘கான் சிட்டி’!”

இன்றைய நகர வாழ்க்கையில் சம்பளம் வருவதற்கும் முன் EMI வருவது சாதாரணமாகி விட்டது. அந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நடக்கும் கலகலப்பையும், பரபரப்பையும் முழுக்க கமர்ஷியல் பாணியில் சொல்ல வருகிற படம் தான் “கான் சிட்டி”.

அர்ஜூன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதியை படக்குழு ஒரு மாஸ் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

படத்தின் ஆரம்ப அறிவிப்பிலிருந்தே “கான் சிட்டி” மீது ஒரு தனி கவனம் உருவாகி இருந்தது. காரணம், வழக்கமான ஆக்ஷன் அல்லது காதல் கதையைத் தாண்டி, நகரத்தில் கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. ஆனால் அதை சோகமாக அல்லாமல், நகைச்சுவை, உணர்வு, த்ரில் ஆகியவை கலந்த முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் வடிவமைத்திருக்கிறார்.

அர்ஜூன் தாஸுடன் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக யோகி பாபுவின் காமெடி ட்ராக் மற்றும் அர்ஜூன் தாஸின் மாஸ் திரைநிலை ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் “ரா ரா ரங்கையா” பாடல் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீது பெரிய கவனத்தை திருப்பியது. அதன் பிறகு வந்த “நான் தான் கிங்கு” பாடலும் இளைஞர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்தது. ஷான் ரோல்டனின் இசை இந்த படத்தின் முக்கிய பலமாக பேசப்படுகிறது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே படத்திற்கு வணிக ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 26 ரிலீஸ் அறிவிப்புடன், “கான் சிட்டி” தற்போது இந்த மாதத்தின் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

“Debt, Drama & Entertainment… ‘Kaan City’ Set to Take Over Theatres on June 26!”

In today’s urban lifestyle, EMIs arrive even before salaries do. Bringing the struggles, chaos, emotions, and humour of a middle-class family caught in that reality to the big screen is “Kaan City”, a full-fledged commercial entertainer with a relatable core.

Starring Arjun Das in the lead role, the film is all set for a worldwide theatrical release on June 26. The makers officially announced the release date with a striking action-packed poster, which has already started creating buzz among fans on social media.

Right from its announcement, “Kaan City” has managed to grab attention for its unconventional premise. Instead of following the usual action or romance formula, the film revolves around the life of a middle-class family struggling under financial pressure in a fast-paced city environment. Director Harish Durairaj has packaged the story as an engaging family entertainer filled with humour, emotions, and thrilling moments.

Alongside Arjun Das, the film features Anna Ben, Yogi Babu, and Vadivukkarasi in pivotal roles. Fans are particularly looking forward to Arjun Das’ intense screen presence and Yogi Babu’s comic timing, which are expected to be major highlights of the film.

The teaser released earlier received a strong response from audiences. The first single, “Raa Raa Rangaiya,” quickly went viral on social media, while the second single, “Naan Thaan Kingu,” has become popular among youngsters. Music composer ’s soundtrack is already being seen as one of the film’s strongest assets.

Shot across locations including Mangaluru, Chennai, and Mumbai, “Kaan City” has also secured a major digital deal, with streaming giant acquiring its OTT rights. Industry circles believe this has further boosted the film’s commercial prospects even before its theatrical release.

With the June 26 release announcement now out, “Kaan City” has officially entered the list of the most anticipated Tamil releases of the month.