நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தேவி படத்தின் மூலம் முத்திரை பதிக்க வருகிற பிரபுதேவா. இவரது தயாரிப்பில் ஆயுத பூஜை விருந்தாக வருகிறது தேவி. இன்று இப்படத்தின் முதற்கட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
இதில் படத்தின் இரண்டு பாடல்களும் ஒரு ட்ரைலர் திரையிட்டனர் இதில் ஒரு பாடலில் பிரபு தேவா எமி ஜாக்சன் நடித்த சல்மார் பாடலில் பிரபு தேவா சும்மா அதிரவிட்டுள்ளர் என்று தான் சொல்லணும் ஐயோ சாமி இது உடம்பா இல்லை ரப்பரா என்று யோசிக்க வைக்கிறது அதுவும் இந்த வயதில் அம்மாடி அப்படி ஒரு நடனம் இந்த ஒரு பாடலுக்காக இந்த படம் நூறு நாள் ஓடும் அந்த அளவுக்கு பட்டும் சரி நடனமும் சரி இந்திய மைகேல் ஜாக்சன் என்று சொல்வது நூறு சதவிதம் உண்மை அடுத்து உன்னக்கு நான் ஒன்னும் இலச்சவல் இல்லை என்று தமன்னாவின் நடனம் அம்மாடி அடேங்கப்பா என்று வாயை பிளக்கவைகிறது ஒரு பக்கம் பிரபு தேவா இன்னொரு பக்கம் பிரபு தேவி தான் தமன்னா இந்த இரண்டு பாடலுக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக இருக்கும் என்பதில் எந்த வித அச்சம் இல்லை என்று தான் சொல்லணும்
இந்த படத்துக்கு மேலும் ஒரு சாதனை இருக்கு இந்திய சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் எடுக்கும் படம் என்றால் அது தேவி தான் என்பது மேலும் சிறப்பு அது மட்டும் இல்லாமல் குறைந்த நாளில் அதாவது மூன்று மொழிகளிலும் மொத்தம் 6௦ நாளில் எடுக்க பட்ட படம்
பிரபுதேவா நடிக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு ” முதலில் இப்படத்தில் வேறு ஒருவர் நடிக்கிறதா தான் முடிவு செய்தோம் , ஆனால் விஜய் நீங்களே நடியுங்கள் என்று என்னை அவர் வழிக்கு கொண்டு வந்தார். தேவி ஒரு பேய் படம் தான் ஆனால், பேய் இருக்கு ஆனா இல்ல என்பது போல என்னையும் குழப்பி, ஒரு வித்தியாசமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் விஜய்.
மாடர்ன் பெண்ணை கல்யாணம் செய்ய விரும்பும் நான் கடைசியில் கிராமத்து பெண்ணான தமன்னாவை கல்யாணம் செய்வேன். அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே தேவி என்று கூறியுள்ளார்.