தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்தவர். இவரின் படத்தில் கதை களமும் திரைக்கதையும் ரொம்ப வலுவாக இருக்கும் பல முக்கிய நடிகர்களுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் இருந்தும் இவரிடம் பல குறைகள் உள்ளது . இதனால் தொடர்ந்து எல்லா ஹீரோகலுடன் மோதல் நடந்து கொண்டே இருக்கிறது கொஞ்ச நாள் முதல் சூர்யா அடுத்து சிம்பு இரண்டு நாளுக்கு முன் விக்ரம் இப்போது தனுஷ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
ஆனால் எப்போதோ முடிய வேண்டிய படம் இன்னும் முடியாமல் இருக்கிறது இதற்கிடையில் தனுஷ். விஐபி 2, பவர் பாண்டி என பிஸியாகிவிட்டார். கௌதமும் துருவ நட்ச்சத்திரம படத்தில் பிஸியாகிவிட்டார். எனவே தனுஷ் – கௌதம் இடையில் விரிசல் விழுந்துவிட்டதாகவும் படம் முடிந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.