
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்ற பட்டியலில் இடம் பிடித்து உள்ள ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொன்னால் மிகையாகது காரணம் சினிமாவில் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றி கண்டவர் தற்போது உலக அளவில் பிரபலமாக தயாரகிவிட்டர்காரணம் அவர் வெளி வர இருக்கும் ஹாலி வுட் படம் வரும் 30ம்தேதி வெளியாகிறது இதற்கிடையில் இவரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படம் மாரி 2 இதன் முதல் பாகம்மிக பெரிய வெற்றியை கண்டது நாம் அறிந்த விஷயம் இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார்

தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக சமீபத்தில் வெளிவந்த தியா படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. ஏற்கெனவே, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
சாய் பல்லவி அறிமுகமான தியா படம் சரியாகப் போகாததால், அவருக்கும் பெரிய பெயர் கிடைக்கவில்லை. ஆனால், அந்தக் குறையை அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கம் படங்கள் தீர்த்து வைக்க வாய்ப்புள்ளது.
சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். அந்தப் படத்தில் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. ஆனால், தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் அவர் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது.
சென்னையில் வசிக்கும் பெண் ஆட்டோ டிரைவராக அதிரடியான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஜிகே படத்திற்கு முன்தாகவே மாரி 2 படம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படம் தான் சாய் பல்லவிக்கு சரியான திருப்புமுனையாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
