Saturday, February 15
Shadow

பா பாண்டி இரண்டாம் பாகம் இயக்க தயாராகும் தனுஷ்

தனுஷ் இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் அது மட்டும் இல்லாமல் தான் செய்யும் காரியம் மிக சிறப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர். இதுவரை அவர் தொட்ட எல்லா விஷயத்திலும் வெற்றியை கண்டவர் என்ற பெருமை கொண்டவர்.

நேற்று இவரின் கதை திரைகதை வசனத்தில் உருவான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் இசைவெளியீடு விழா மிக பிரமாண்டமாக மும்பையில் நடைபெற்றது நாம் அறிந்த விஷயம் இது நாம் அனைவரும் அறிந்த விஷயம் படத்தின் பாடல்களும் ட்ரைலரும் ரசிகர்களிடம் இகுந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.

தனுஷின் சமீப அவதாரம் என்றால் அது இயக்குனர் அவதாரம் அதில் மிக பெரிய வெற்றிபெற்றார் வர்த்தக ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது இதனால் மீண்டும் படம் இயக்கம் எண்ணம் தனுஷ்க்கு வந்துள்ளது அது வேறு கதை எல்லாம் இல்லை பா பாண்டி படத்தின் இரண்டாம் பாகம் தான் முதல் பாகத்துக்கு கிடைத்த மிக பெரிய வரவேற்ப்பு தனுஷ்க்கு இரண்டாம் பாகம் இயக்க ஊக்கம் அளித்துள்ளது.
இதன் கதை திரைகதை வேலைகளிலும் இறங்கிவிட்டாராம்.

நடிகர் ராஜ்கிரனுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்குதாம் அவர் தேதி கிடைத்துவிட்டால் உடனே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகல் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது,

Leave a Reply