
துருவ் விக்ரமின் மாஸ் அவதாரத்திற்கு தொடக்கம்… மைத்ரி மூவி மேக்கர்ஸின் 4வது தமிழ் படமான ‘#DV4’ பூஜையுடன் பிரம்மாண்டமாக துவக்கம்!
சென்னை:
பான் இந்திய அளவில் வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழிலும் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் அவரது நான்காவது திரைப்படமான #MythriTamil04 / #DV4, பாரம்பரிய பூஜையுடன் சென்னையில் கோலாகலமாக தொடங்கப்பட்டு, தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையின் எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், படக்குழுவினருடன் பல்வேறு இயக்குநர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், சசி, ‘ஹாய் நானா’ புகழ் சௌர்யுவ், ஆண்டனி பாக்யராஜ், ராஜா உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். முகூர்த்தக் காட்சிக்கான கிளாப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகும் அதிரடி பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கதையை ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முழுமையான மாஸ் ஹீரோ தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புத் திறனை நிரூபித்து வந்த துருவ் விக்ரம், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான வணிக அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
துருவ் விக்ரமுடன் பிருத்வி பாண்டியராஜன் மற்றும் சாய் தீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை விக்கி, படத்தொகுப்பை ஜெயசூர்யா, தயாரிப்பு வடிவமைப்பை ஜி.எம். சேகர், ஆடை வடிவமைப்பை பிரவீண் ராஜா மேற்கொள்கின்றனர். தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் படத்தின் அதிரடி காட்சிகளை வடிவமைக்கிறார்.
‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய தமிழ் திரைப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் யலமஞ்சிலி இணைந்து தயாரிக்கும் இப்படம், துருவ் விக்ரமின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர்கள்:
- துருவ் விக்ரம்
- பிருத்வி பாண்டியராஜன்
- சாய் தீனா
தொழில்நுட்பக் குழு:
- தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
- தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் யலமஞ்சிலி
- இயக்கம்: கரண் அரவிந்த் குமார்
- கதை: ஷபி, கரண் அரவிந்த் குமார்
- ஒளிப்பதிவு: விக்கி
- படத்தொகுப்பு: ஜெயசூர்யா
- தயாரிப்பு வடிவமைப்பு: ஜி.எம். சேகர்
- ஆடை வடிவமைப்பு: பிரவீண் ராஜா
- சண்டைப் பயிற்சி: விக்ரம் மோர்
- மக்கள் தொடர்பு: யுவராஜ்

Dhruv Vikram’s Fourth Film ‘#DV4’ Launched in Grand Style; Mythri Movie Makers Kickstart Their Fourth Tamil Venture
Chennai:
Leading pan-India production house Mythri Movie Makers has officially launched its fourth Tamil film, marking another significant step in its expansion beyond Telugu cinema. The new project, tentatively titled #MythriTamil04 / #DV4, stars Dhruv Vikram in the lead and was formally inaugurated with a traditional pooja ceremony in Chennai.
The grand launch took place at the Mythri Movie Makers office in MRC Nagar, Chennai, in the presence of the film’s cast, crew, and several prominent filmmakers from the Tamil film industry. Directors Adhik Ravichandran, Sasi, Hi Nanna fame Shouryuv, Antony Bhagyaraj, Raja, and others attended the ceremony to extend their best wishes to the team. Director Keerthiswaran sounded the clapboard for the auspicious muhurtham shot, officially commencing the film’s production.
The film will be directed by Karan Aravind Kumar, who is making his directorial debut with this ambitious commercial entertainer. He has co-written the story with Saby, promising a screenplay packed with action, emotion, and entertainment.

Following the blockbuster success of Bison, Dhruv Vikram is all set to present himself in a completely new mass-action avatar. Widely appreciated for choosing performance-oriented and unconventional roles, the young actor is now gearing up to entertain a broader audience with a full-fledged commercial entertainer, making #DV4 one of the most anticipated projects in his career.
The film also stars Prithvi Pandiarajan and Sai Dheena in pivotal roles. The technical team features cinematographer Viki, editor Jayasuriya, production designer G.M. Sekhar, costume designer Praveen Raja, and National Award-winning action choreographer Vikram Mor, who will design the film’s action sequences.
Produced on a lavish scale by Naveen Yerneni and Y. Ravi Shankar Yalamanchili under the Mythri Movie Makers banner, the film comes after the production house’s major successes with Good Bad Ugly and Dude. The collaboration between Mythri Movie Makers and Dhruv Vikram has already generated considerable excitement among fans and the industry alike.
Further announcements regarding the female lead, music composer, and the rest of the cast and crew are expected in the coming weeks.
Cast:
- Dhruv Vikram
- Prithvi Pandiarajan
- Sai Dheena
Technical Crew:
- Banner: Mythri Movie Makers
- Producers: Naveen Yerneni & Y. Ravi Shankar Yalamanchili
- Director: Karan Aravind Kumar
- Story: Saby & Karan Aravind Kumar
- Cinematography: Viki
- Editing: Jayasuriya
- Production Designer: G.M. Sekhar
- Costume Designer: Praveen Raja
- Action Choreography: Vikram Mor
- PRO: Yuvraaj
