
ரூ.1000 கோடி இலக்கை நோக்கி பாயும் ‘துரந்தர் பழிவாங்கல்’ – 2 வாரங்களில் உலகளவில் ரூ.1500 கோடி வசூல்!
இந்திய சினிமாவில் வசூல் சாதனைகளை முறியடித்து முன்னேறிக் கொண்டிருக்கும் ‘துரந்தர் பழிவாங்கல்’ திரைப்படம், வெளியான இரண்டாவது வார முடிவில் ரூ.1000 கோடி நெட் வசூலை நெருங்கி வரலாற்றுப் பயணத்தை தொடர்கிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட படம், வெறும் இரண்டு வாரங்களில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.961 கோடி (நெட்) வசூல் செய்துள்ளது. இதன் மூலம், ரூ.1000 கோடி என்ற இமாலய மைல்கல்லை எட்டுவதற்கான பாதையில் வேகமாக நகர்கிறது.
உலகளவிலும் இப்படத்தின் ஆதிக்கம் அதிரடியாய் தொடர்கிறது. தற்போது வரை ரூ.1501 கோடி வசூலை குவித்துள்ள இந்த படம், சர்வதேச சந்தைகளிலும் தனது வலுவான நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. குறுகிய காலத்திலேயே இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைக்கும் சாதனையை இப்படம் படைத்துள்ளது.
முதல் வாரத்தில் ரூ.690 கோடி வசூல் செய்த இப்படம், இரண்டாவது வார இறுதியில் ரூ.177 கோடி சேர்த்தது. தொடர்ந்து வேலை நாட்களிலும் வசூல் வலுவாக நிலைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. திங்கள் முதல் வியாழன் வரை தினசரி வசூல்கள் முறையே ரூ.26 கோடி, ரூ.28 கோடி, ரூ.21 கோடி மற்றும் ரூ.19 கோடி என பதிவாகி, இரண்டாவது வார மொத்த வசூல் ரூ.271 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த நெட் வசூல் ரூ.961 கோடி மற்றும் க்ராஸ் வசூல் ரூ.1134 கோடி ஆகியுள்ளது. வெளிநாடுகளில் முதல் இரண்டு வாரங்களிலேயே ரூ.367 கோடி வசூலித்து, உலகளாவிய மொத்த வசூலை ரூ.1501 கோடியாக உயர்த்தியுள்ளது.
‘துரந்தர் பழிவாங்கல்’ படம் பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளது. ஹிந்தி திரைப்படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் வசூல், கட்டண பிரிவியூ மூலம் அதிக வசூல், உலகளவில் முதல் வார இறுதியில் அதிக வசூல், அதிக முதல் வார மற்றும் இரண்டாவது வார வசூல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் இதில் அடங்கும். மேலும், உலகளவில் மிக வேகமாக ரூ.1000 கோடியை எட்டியதுடன், 100 முதல் 900 கோடி வரை அனைத்து முக்கிய வசூல் இலக்குகளையும் குறைந்த நாட்களில் கடந்த படமாகவும் இது திகழ்கிறது.
வெளிநாட்டு சந்தைகளிலும் இப்படம் புதிய சாதனைகளை படைத்துள்ளது. முதல் வாரத்திலேயே அதிக வசூல் செய்த இந்திய படம், வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய படம் ஆகிய பெருமைகளையும் பெற்றுள்ளது. மேலும், ‘துரந்தர் பாகம் 1’ படத்தின் முழு வெளிநாட்டு வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், ‘துரந்தர் பழிவாங்கல்’ திரைப்படம் வசூல் மட்டுமின்றி, இந்திய சினிமாவின் வரலாற்றையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சாதனைப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

‘Dhurandhar Pazhivangal’ races towards ₹1000 crore mark – Crosses ₹1500 crore worldwide in just 2 weeks!
Continuing its record-breaking run at the box office, Dhurandhar Pazhivangal is rapidly nearing the ₹1000 crore net mark in India by the end of its second week.
Produced by Jio Studios and B62 Studios, and directed by Aditya Dhar, this grand cinematic spectacle has amassed ₹961 crore (net) at the Indian box office within just two weeks. The film is now on track to cross the monumental ₹1000 crore milestone very soon.
Globally, the film’s dominance remains unmatched. With a massive ₹1501 crore collected worldwide so far, Dhurandhar Pazhivangal has firmly established its stronghold in international markets as well. In a remarkably short span, the film has redefined global benchmarks for Indian cinema.
After collecting ₹690 crore in its extended first week (8 days), the film added ₹177 crore over the second weekend. Notably, it maintained strong momentum during weekdays too. From Monday to Thursday, the film collected ₹26 crore, ₹28 crore, ₹21 crore, and ₹19 crore respectively, taking its second-week total to ₹271 crore.
This brings the total Indian box office collection to ₹961 crore (net) and ₹1134 crore (gross). Overseas, the film has earned ₹367 crore in two weeks, pushing its total worldwide gross to ₹1501 crore.
Dhurandhar Pazhivangal has already created multiple records. It holds the record for the biggest opening for a Hindi film, highest earnings from paid previews, biggest global opening weekend, highest first-week and second-week collections, and the fastest film to cross ₹1000 crore worldwide. Additionally, it has achieved every major milestone from ₹100 crore to ₹900 crore in record time.
The film has also made a massive impact in overseas markets, becoming the highest-grossing Indian film in its first week internationally and setting new benchmarks in North America. Impressively, it surpassed the lifetime overseas collection of Dhurandhar Part 1 within just 10 days.
Overall, Dhurandhar Pazhivangal is not just a box office success, but a historic milestone that is pushing Indian cinema to unprecedented global heights.
