Tuesday, February 11
Shadow

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எஸ். ஏ. சந்திரசேகர் பிறந்த தினம்

இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.

சந்திரசேகர் தமிழ்நாடு மாநிலம் ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார்.[3] இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார்.

சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவி யை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்துள்ளார்.[6] எஸ்.சங்கர்,எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். டூரிங் டாக்கிஸ் திரைப்படம் சந்திரசேகர் இயக்கிய 69 வது படமாகும்

இவர் நடித்த திரைப்படங்கள்

டிராஃபிக் ராமசாமி, நையப்புடை, டூரிங் டாக்கிஸ், சட்டப்படி குற்றம், வெளுத்து கட்டு, பந்தயம், நெஞ்சிருக்கும் வரை, ஆதி, சுக்ரன், முத்தம், தமிழன், தோஸ்த், பெரியண்ணா, நெஞ்சினிலே, ஒன்ஸ்மோர், மாண்புமிகு மாணவன், விஷ்ணு, தேவா, ரசிகன், செந்தூரப் பாண்டி, ஜீவன் கீ சத்ரஞ், ராஜதுரை, இன்னிசை மழை, நாளைய தீர்ப்பு, மேரா தில் தேரா லியா, இன்சாஃப் கி தேவி, ஆஸாத் தேஷ் கீ குலாம், ஜெய் சிவ் சங்கர், சீதா, ராஜநடை, இது எங்கள் நீதி, பூவும் புயலும், சுதந்திர நாட்டு அடிமைகள், குட்ராத் கா கனுன், நீதிக்கு தண்டணை, நிலவே மலரே, சட்டம் ஒரு விளையாட்டு, எனக்கு நானே நீதிபதி, என் சபதம், வசந்த ராகம், சிகப்பு மலர்கள், பாலிடான், இன்டிகோ ருத்ரமா, நான் சிகப்பு மனிதன், நீதியின் மறுபக்கம், புது யுகம், குடும்பம், தேவந்தகுடு, டோப்பிடி டோங்குலு, வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெற்றி, ஹசிடா ஹெப்புலி, பல்லேட்டுரி மோனகாடு, கெத்த மகா, சாட்சி, சம்சாரம் என்பது வீணை, சிம்ஹ கர்ஜனை, நாயா எல்லிடி, பாலிடனம், இதயம் பேசுகிறது, ஓம் சக்தி, பட்டணத்து ராஜாக்கள், சாட்டனிக்கி காலு லேவு, நீதி பிழைத்தது, ஜாதிக்கோர் நீதி, நெஞ்சிலே துணிவிருந்தால், சட்டம் ஒரு இருட்டறை